பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சிறந்த சொற்பொழிவுகள்

உதவி செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். 100-க்கு 80 பேர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள். ஆகையால் அவர்களுக்குப் போதுமான வைத்திய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அரசாங்கத்தாருடைய கடமையாகும்.

அவ்வாறு சென்னை ராஜதானியிலுள்ள 22,832 கிராமங்களுக்கும் ஆங்கில வைத்திய சாலைகளை அமைப்பதானால் அரசாங்கத்திற்கு ஏராளமான பொருட் செலவு ஏற்படும். அப்படியல்லாமல், சித்த வைத்தியத்திற்கு உதவி செய்து அதிகமான சித்த வைத்தியர்களை உண்டாக்கி விட்டால், பணச் செலவு மிகவும் குறைவாக இருக்கும். மேலும் வைத்தியசாலைகளுக்காகக் கட்டடங்கள் கட்ட வேண்டிய செலவுகள் இல்லை. இன்னும் ஆஸ்பத்திரி சம்பந்தமான பெரிய செலவுகள் ஆண்டுதோறும் ஏற்படமாட்டா, ஆகையால் சொற்பச் செலவில் கிராமங்களுக்கெல்லாம் வைத்திய உதவி செய்ய சித்த வைத்தியர்களே போதும்.

இவ்வழியில் பணம் மிச்சப்படுமாகையால், அரசாங்கத்தார் ஒரு நிமிஷங்கூட தாமசம் செய்யாது சித்த வைத்தியத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

இப்போ திருக்கிற சித்த வைத் தியர்களைச் சென்னையில் எற்படுத்தியிருக்கும் சித்த வைத்திய கல்லூரிகளுக்கு வரவழைத்துச் சுகாதாரப் பாடங்களைச் சில மாதங்களுக்குள் கற்பித்துக் கொடுத்தால், அவர்களே கிராமங்களில் சுகாதாரம் வைத்தியம் முதலியவைகளைக் கவனித்துக் கொள்வார்கள். கிராமங்களில் சுகாதாரம் மிகக் குறைவாக இருக்கிறது. மேற்கண்டவாறு செய்தால், எல்லா ஜனங்களுக்கும் அரசாங்கத்தாருக்கும் இலாபம் உண்டு. - -

ஆகையால் சித்த வைத்தியர்களுக்கு மேற்கண்ட பயிற்சிகளை உடனே செய்து கொடுக்கும் படி அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சித்த வைத்தியக் கல்லூரி சித்த வைத்தியம் யாவரும் புகழும்படி முன்னேற்றமடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய உண்மையான எண்ணம். அதற்கு முதலாவது, சித்த வைத்தியக் கல்லூரி வைத்து மாணாக்கர்களுக்குப் படம் கற்பித்து, சோதனையில் தேறி வந்தவர்களை யாவரும் ஆதரிக்கும்படி செய்ய வேண்டும். வைத்தியக் கல்லூரி இல்லாமல் ஒரு