பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். டி. சுப்பிரமணிய முதலியார் 53

ஒவ்வொருவரும் ஆராயச்சி செய்து இந்தச் சங்கத்தின் மூலமாக எந்த விதமான உங்கள் கடமையைச் செய்ய நினைத்திருக்கிறீர்கள் என்று உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்கிறேன்.

எனது அன்பார்ந்த சித்த வைத்தியர்களே ! நீங்கள் யாவரும் முன்னேற்ற மடைந்து, புகழும் பெருமையும் பெறவேண்டு மென்கிற பிரியம் எனக்கு மிகுதியாக உண்டு. அதனால் இப்பொழுது எனக்குத் த்ெரிந்த பல வழிகளைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

இவ்விடத்தில் பல மகான்களும் திறமையுள்ள சித்த வைத்தியர்களும் வந்து கூடியிருக்கிறார்கள். இன்னும் மற்ற காரியங்களைப் பற்றி நீங்களும் யோசித்து எல்லாவற்றையும் சிறப்பாய்

முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்களும் ஒற்றுமைப்பட்டுப் பொது நோக்கத்துடனும் தயாளமான

எண்ணத்துடன் சித்த வைத்தியத்தைப் பல வழிகளிலும் முன்னேற்ற

மடையும்படி செய்ய உண்மையான மனதுடன் ஒத்துழைப்பீர்களானால், உங்களுக்கு உதவிசெய்ய பல பெரியோர்கள் முன் வருவார்களென்று நிச்சயமாய் எண்ணுங்கள். இத்துடன் எனது சொற்பொழிவை முடிப்பதோடு, நாமெல்லோரும் சித்த வைத்தியத்திற்காக உடல், பொருள், ஆவி மூன்றையும் தந்து எண்ணிலாத பிரயாசையை யெடுத்து இவ்வளவு பெருமையுடன் இந்த மகாநாட்டை நடத்தி வைக்கிற சங்க அமைச்சர் சிவஞான யோகிகளுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

வரவேற்பு

நமது வேண்டுகோளுக்கு இணைங்கி கனம் ஆனரபில் மந்திரி ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார் பி.ஏ., பி.சி.இ., எம்.எல்.சி. அவர்கள் தங்கள் செளரியங்களையெல்லாம் கவனியாது இந்த மகாநாட்டிற்குத் தலைமை பூண்டு, நம்மைப் பெருமைப்படுத்த வந்திருப்பதற்கு இச்சங்கத்தின் சார்பாக நான் வரவேற்கிறேன்.

கண்காட்சியைத் திறந்து வைக்க நம்பால் அன்பு வைத்து இங்கு வந்திருக்கும் இந்திய மருத்துவ கலாசாலை பிரின்ஸிபால் கேப்டன் டாக்டர் ரீனிவாச மூர்த்தி பி.ஏ.,பி.எல்., பி.சி.எம்., அவர்களையும் இச்சங்கத்தின் சார்பாக வரவேற்கிறேன். .