பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ. உ. சிதம்பரம்பிள்ளை 63

பொருளில்லாமல் ஒரு வேலையும் செய்ய முடியாது. அதற்குத் தொழிற்கல்வி, விவசாயம் கற்பிக்க வேண்டியது அவசியமாகும். சட்டசபை மெம்பர்களிடம் சொல்லிக் கட்டாயமாக விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றைப் போதிக்க வேண்டுமென்று மசோதா கொண்டு வரச் செய்யுங்கள். அதனை அவர்கள் செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் அவர்கட்கு ஒட்டுக் கொடுக்காதீர்கள்.

தனவைசியர்கள் கலாசாலை போன்றவைகளுக்குப் பொருள் நல்குவது சந்தோஷத்தைத் தருகின்றது. ஆனால், பணத்தைப் பிறரிடம் கொடுத்தால் எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்று பயப்படக் கூடாது. எனினும் வறுமையுடையவனிடம் பணப்பொறுப்பை விடுதல் தகாது. ஏனெனில், தனக்குத் தேவையிருக்கும்போது அப்பணத்தை உபயோகப்படுத்தி விடுவான். -

பெண்மக்கள் நிலை

நம் நாட்டில் பெண்மக்களைச் சமைக்கும் இயந்திரமாகச் செய்து விட்டனர். இந்நாட்டில் இது இல்லையென எண்ணுகிறேன். பிள்ளைபெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப் போல் பெண்கட்கும் சமஉரிமை இருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல் அவசியமாகும். ஆனால், அவர்கள் அதற்குத் தகுதியுடைவர்களா என்று பார்க்கின், இல்லை. ஏன்? அவர்கட்குக் கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும். - -

இந்நாட்டில் மனைவியோடு பேசுவது கஷ்டமென்று எனது நண்பர் சொன்னார். இது மிக மோசமானது. பெண்களும் தங்கள் கணவர்களை நன்கு மதித்து நடக்க வேண்டும்.

எச்சில் இலையில் சாப்பிடும் வழக்கம் எங்கள் ஜாதியில் உண்டு. இங்கு உண்டோ என்னமோ தெரியவில்லை. (உண்டு, உண்டு என்று ஜனங்கள் கூறினர்.) பிராமண வீட்டிலும் இருக்கிறதா? இருக்கிறது என்றனர்.) நாகரிகமில்லாதவர் என்பவரிடத்தில்கூட இக்கொடுமை இல்லை.

அயலூருக்கு விருந்துக்குப் போயிருந்தாலும், ஆயிரம்பேர் சாப்பிட்ட இலைகளில் என் இலையைத் தேடிப் பார்த்து அதிலேயே என் மனைவி சாப்பிடவேண்டும். அதில் மண் விழுந்திருக்கும். இன்னொருவருடைய இலையில் அப்பளங்கள் விழுந்திருக்கலாம். அவைகளைக் கவனிப்