பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சிறந்த சொற்பொழிவுகள்

ஊர்ஊராக வருடந்தோறும் சமூக மகாநாடு நடைபெறும்போது ஒரு கைத்தொழில் மகாநாடும் நடத்தி நெசவு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்தல் வேண்டும்.

நெசவுப் பொருட்காட்சியொன்று நடத்திப் போட்டிப் பரிசுகள் வழங்கப்படல் வேண்டும். நம்மவர்கள் வசிக்கும் இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் ஸ்தாபிக்க வேண்டும். சங்கங்கள், நெசவுக்கு வேண்டிய பொருள்களை வரவழைத்துத் தவணைக் கடனுக்குக் கொடுத்து நம்மவர்கள் தயாரிக்கும் ஆடைகளைப் போட்டியில் குறைத்து விற்கும்படி விடாமல் நியாயமான விலைக்கு வாங்கிக் கொண்டு மொத்தமாய் வெளிக்கு அனுப்பவேண்டும். -

உலகம் எவ்வித ஆடைகளை விரும்புகின்றது என்று தெரிந்து அதன்படி தயாரிக்க ஏற்பாடுகள் செய்யவும், நெசவுத் தொழிலில் தேர்ந்தவர்களைக் கொண்டு வீடுதோறும் சென்று நூதன முறைகளைக் கையாளுமாறு கற்பித்து வரவும் வேண்டும்.

வியாபாரத்துக்குப் பயிற்சி தவிர, கல்வியும் வேண்டும். நம்நாட்டில் பெரும்பாலும் படிப்பற்றவர்களே வியாபாரம் செய்கின்றனர். மேல் நாடுகளில் நன்கு படித்த பின்னரே வியாபாரத்தில் இறங்குகின்றனர். சமுதாயத்தில் ஒருவரும் 12-வயது வரையாவது படித்த பிறகே தொழிலில் இறங்க வேண்டும். -

பிரதிநிதித்துவம்

நமது குறைகளை நாமே நிவர்த்தி செய்து கொள்வதுமல்லாமல் அரசாங்கத்தாரையும் நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு கேட்க வேண்டும். நமது குறைகளை அரசாங்கத்தாரிடம் எடுத்துச் சொல்ல சட்ட சபைகளிலும் ஜில்லா போர்டு போன்ற ஸ்தல ஸ்தாபனங்களிலும் நம்மவர்களின் பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுப்பு மூலம் சட்ட சபைகளிலோ ஸ்தாபனங்களிலோ அங்கம் பெறுவது நம்மால் இயலாது. ஆகவே நம்மவர்களிலிருந்தும் பிரதிநிதிகள் நியமிப்பதற்கு அரசாங்கத்தாரைக் கேட்க வேண்டும். -

பத்திரிகை

சென்ற மகாநாட்டில் பத்திரிகையின் அவசியத்தை நன்குணர்ந்து ஒரு புத்திரிகை நடத்தப்படவேண்டும் என்றதோர் தீர்மானமும்