பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் அருள்மணி பிச்சமுத்து 77

புத்தர் பெருமான் பெண்கள் மெல்லிய மஸ்லின் துணிகளை உபயோகிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறார். நகுல பீடமென்பவர் சாகும் தறுவாயில் தன் மனைவி தான் இறந்தபின் வறுமையினால் கஷ்டப்படுவாளேயென்று வருந்தினபோது, மனைவி அதை அறிந்து, "எனக்கு நூல் நூற்கத் தெரியும்; இதைக்கொண்டு பிழைப்பை நடத்திக் கொள்வேன்; ஆகையால் நீங்கள் வருந்த வேண்டாம்” என்று ஆறுதலான வார்த்தை சொன்னாளென்று புத்த சரிதைகளில் ஒரு கதை உண்டு.

கிறிஸ்து மதத்தில் ஸ்திரீகளுக்குச் சொல்லப்பட்ட உபதேசத்தில், பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது விலையேறப் பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும் நாணத்தினாலும் தெளிந்த புத்தியினாலும் நற்கிரியைகளினாலும் தாங்கள் அலங்கரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது சகோதரிகள் கவனிக்க வேண்டிய விஷயம் உதவி மறுத்தல் காலத்தில் நான் இங்கிலாந்தில் இருந்தபொழுது கதரைப் பற்றிப் பலமாக அங்கே பேச்சு நடந்தது. ஏழு வருஷத்திற்கு முன் நான் இந்தியா தேசம் திரும்பி வந்தபோது, ”எல்லோரும் கதராடைதான் அணிந்திருப்பார்கள். நான் மாத்திரம் அந்நியத் துணி யணிந்து விகாரமாய்த் தோன்றுவேனே.” என்று நாணத்தோடு வந்தேன். ஆனால் இங்கே எங்கு பார்த்தாலும் அதற்கு முழுவதும் எதிரிடையாக மெல்லிய சீமை மஸ்லின் துணிகளும், சீமையில் அவர்கள் பார்த்து நகைக்கும்படியான பழைய மாதிரி உடைகளே எங்கும் நிறைந்திருப்பதைப் பார்த்து வியப்பும் விசனமுமா யிருந்தது.

மகமதிய மதத்தில் பெண்களின் உத்தமத் தொழில் நூல் நூற்றலே

என்று மகம்மது நபிநாயகம் அவர்கள் கூறியதாகத் தாபெமுல் இஸ்லாம் என்னும் மகம்மதிய நூல் கூறுகிறது. பெண்கள் வெளியில் செல்லாமலும், பிறரை எதிர்பாராமலும் கற்புடன் ஜீவனம் செய்வதற்கு உதவுவதாய், நூற்றல் பெண்களின் உத்தமத் தொழிலாயிற்று என்ற ஒரு மகம்மதிய நூலாசிரியர் வியாக்கியானம் செய்திருக்கிறார்.

காந்தியடிகள் அவர்கள் சுற்றுப் பிரயாணத்தில் ஒரு இடத்தில், நாளைக்குக் கண்ணுக்கு இனிய காட்சியைப் பாருங்கள் என்று சொல்லி, தங்கள் நண்பரில் ஒருவருக்குப் பந்தலின் நிழலில் நூற்கும் 800 மகம்மதிய சகோதரிகளைக் காட்டினார். எவ்வளவோ ஏழை மகம்மதிய சகோதரிகளுக்கு நூல் நூற்பதினால் பிழைப்பு ஏற்பட்டிருக்கிறது. -