பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் அருள்மணி பிச்சமுத்து 79

பலஸ்தினாவில் அரசு புரிந்த சாலமோனுக்கு இந்தியாவிலிருந்து சிந்து என்னும் துணி போயிற்றாம். சிந்து என்றால் மஸ்லின் என்று பொருள். ரோமாபுரியில் சுமார் 200 வருஷங்களுக்கு முன் வாழ்ந்திருந்த பிளினி என்பவர், அவ்வூரிலுள்ள பெண்கள் வருஷந்தோறும் சுமார் 40 லட்சம் பெறுமான இந்திய மஸ் லீன் துணிகளை வாங்கியதாகக் கூறுகிறார். அத் துணிகளில் சிலவற்றிற்கு, காற்றால் செய்யப்பட்டது என்று பெயர் கூறுகிறார். அதாவது அவ்வளவு மெல்லியவைகளாம்.

ஒளரங்கசீப் மன்னர், தம்முடைய குமாரத்தி சபையில் வந்து நின்றபோது, இப்படி நீ சபையில் துணியில்லாமல் வந்து நிற்கிறது எனக்கு அவமானமாயிருக்கிறது என்று கோபித்தார். அப்போது அவள், 'தகப்பனாரவர்களே! நான் அணிந்திருக்கும் ஆடையை 7 மடிப்பாக மடித்து உடுத்தியிருக்கிறேன் என்றாளாம். அப்படியானால் அந்த ஆடை எவ்வளவு மெல்லியதாயிருக்கு மென்பதை நாமே நிதானித்துக் கொள்ளலாம்.

1000-வருஷங்களுக்கு முன்னிருந்த ராஜ ராஜ சோழர் காலத்தில் வெனிஸ் நகரத்திற்கு ஏராளமான துணிகளும் பட்டுகளும் அனுப்பப்பட்டதாகத் தெரிகின்றது. அக் காலத்தில் நெய்த துணி பாலாவி போலும் பாம்புச் சட்டை போலும் இருந்ததென்று தமிழ் நூல்களால் அறிகிறோம்.

ஆங்கிலேயர் சுமார் 300 வருஷங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தபொழுது நம் கைத்தொழில் முன்போலவே சிறப்பாக நடந்து வந்தது. 1602ஆம் வருஷம் காப்டன் லங்காஸ்டர் துரை 20 கஜமுள்ள டாக்கா மஸ்லின் துணியைக் கைக்குட்டை போல் மடித்துத் தம் மகாராணி எலிஜபேத் அம்மைக்குக் காணிக்கையாக அனுப்பியிருக்கிறார். இன்னமும் ஆங்கிலேயர்களுக்கு இது ஞாபகத்திலிருக்கிறது. ஏனெனில் நான் லண்டனிலிருந்தபோது, என்னிடம் ஆங்கில நண்பர்கள் அழகான டாக்கா மஸ்லின் உன்னிடம் இருக்க வேண்டுமே, அதைக் காட்டு என்கிறார்கள். என்னுடைய அறியாமைக்காக விசனப்பட்டேன். இப்பேர்ப்பட்ட அறிவினத்திற்குக் காரணம் அரசாங்கத்தின் அடிமைப் படிப்பே. இதிலும் இன்னும் இதர விஷயங்களிலும் ஆங்கில அரசாங்கம் நமது புராதன நாகரிகம் கலை சாஸ்திரங்கள் தேசீய உண்மைச் சரித்திரங்களைப் பாடசாலைகளில் கையாடாதபடி தங்கள் தேசத்தின் கல்வி முறைபோல் அரசாங்க முறைகளுக்கேற்பத் தங்கள் சுயநலப் படிப்பு முறையைக் கையாள்வதே இதற்குக் காணரம்.

1721ஆம் வருஷத்தில் இந்தியாவில் அரசாண்ட ஜெகாங்கீர் பாதுஷா காலத்தில் நெய்த மஸ்லின் 15 கஜ நீளமுள்ளது முக்கால் பலம் நிறைதான் இருந்ததாம். -