பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சிறந்த சொற்பொழிவுகள்

இப்படி நூற்றல் நெய்தல் தொழிலை நசுக்கிவிட்டு, அந்நிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டாலும், உள் நாட்டிலுங் கூடத் தொழில் விருத்தி நமது பருத்தி, பட்டுத் துணிகள் உற்பத்தியாகவும் விற்பனை செய்யவும் கூடும். -

இப்படி நூற்றல் நெய்தல் தொழிலை நசுக்கிவிட்டு, அந்நிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டாலும், உள் நாட்டிலுங் கூடத் தொழில் விருத்தி செய்யவும் விற்பனை செய்யவும் விடாதபடி பிரிட்டிஷ்காரர் எடுத்துக் கொண்ட அநீதியான முறைகளையும், இந்தியர்களைப் பலாத்காரமாய்த் தொழிலைவிடச் செய்த கதையையும், இங்கிலாந்தில் அவர்கள் செய்த தீவிரப் பிரசாரங்களையும் நாம் கவனிக்கும்போது நமது மனதில் எழும்பும் கசப்பையும் கோபத்தையும் அடக்குவது கஷ்டமாயிருக்கிறது.

இப்படிக் கைத்தொழில் அழிக்கப்பட்டதால் இந்தியாவிலுள்ள அநேக தொழிலாளிகள் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறார்கள். இதைக் காட்டிலும் நமது அரசாங்கத்தின் கெடுதி வேறில்லையென்று யூமான் கேயர்டு துரை கூறுகிறார்.

முன்னால் ஐந்து கோடி ஜனங்கள் நெசவுத் தொழிலையே தங்களுக்கு ஜீவன உபயோகமாக வைத்திருந்தார்கள். இப்போதோ சுமார் 28 லட்சம் தறிகள்தான் இருக்கின்றன. தொழிலாளிகள் தங்கள் தறிகளை உழவுக் கலப்பைகளாக மாற்றி மூளை கெட்டுக் கூலியாளாக நேர்ந்திருக்கிறதென்று ரீமான் ஹண்டர் துரை கூறுகிறார்.

காஷ்மீர் சால்வை நெசவுக்காரர் கொள்ளைக் காரர்களாகி விட்டார்கள் என்றும் பம்பாய் சேலம் ஜில்லாக்களில் தோட்டிகளாகவும், பஞ்சாபில் பட்டாளச் சேவகர்களாகவும் மாறிவிட்டார்கள் என்றும், "யெளவன இந்தியா’ பத்திரிகையில் மகாத்மா காந்தியடிகள் கூறுகிறார்.

உலகத்திற்குத் துணி கொடுத்தது போக, இப்போது நாம் வருஷத்திற்கு 60 கோடி ரூபாய்க்கு அயல்நாட்டுத் துணி வாங்க நேரிட்டது. இதுவரையில் துணி வகையில் மட்டும் நம் நாட்டிலிருந்து சென்ற பணம் 6-வருஷத்திற்கு முன் எடுத்த கணக்கின் பிரகாரம் 4731 கோடி ரூபாய். இவ்வளவு பெருந்தொகை நாட்டை விட்டுப் போகுமானால், இந்தியா ஏழ்மை அடைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. நாளுக்கு நாள் வருமானமும் குறைகிறது.

1850-ஆம் வருஷத்தில் ஒருவருக்குத் தினசரி வருமானம் 2 அணா. 1927-ஆம் வருஷத்தில் ஒருவரது தினசரி வருமானம் 11