பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சிறந்த சொற்பொழிவுகள்

11. தமிழ்மாகாண முதலாவது சங்கீத மகாநாடு

ஈரோடு 12. 5. 1930

தலைவர் திரு. கே. பொன்னையா பிள்ளை

அவர்கள் சொற்பொழிவு

சகோதர சகோதரிகளே !

இம்மாநாட்டிற்கு அக்கிராசனம் வகிக்க என்னைவிடத் திறமையுள்ள பெரியார்கள் இருக்கும்பொழுது, சிறியேனை அந்தப் பெருமையை அடையும்படி தாங்கள் மனமொப்பிக் கொடுத்த சந்தர்ப்பத்திற்காக நான் எனது ஆழ்ந்த நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இம்மகாநாடு இனிது முடிவுறும்படி தாங்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று நான் மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். -

சங்கீதத்தின் பெருமையும் முற்கால நிலைமையும்

சங்கீதம், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கினையும் மனித சமூகத்திற்கு அளித்து நல் வாழ்க்கைப் படுத்துவதாக இருக்கின்றது. நமது பெரியார் திருவள்ளுவரும் திருக்குறளில் "செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்" என்று. திருவாய் மலர்ந்தருளி இருப்பதை நாம் அறிவோம். ஆகையால் நல்ல சங்கீதத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால், பசி முதலிய பிணிகளால் தொந்திர வேற்படா தென்பது நன்கு விளங்குகிறது. இதைத் தவிர சமூக சீர்திருத்தத்திற்குச் சங்கீதம் அத்தியாவசியமானது. இதற்கிணங்க, திரு கமால் பாட்சா அவர்கள் சங்கீதம் அவசியமென்று மொழியாற்றி யிருப்பதை 'திராவிடன் பத்திரிகை மூலம் எல்லாரும் அறிந்திருப்பீர்கள்.

இப் பெருமை வாய்ந்த கலைக்கு முற்காலத்தில் சங்க நூல்களிற் கண்ட பல புலவர்களும், பல மன்னர்களும், இசை வல்லாராக இருந்து பல நூல்களியற்றி சங்கீதத்தைப் போற்றி வளர்த்தார்கள். பிறகு பல பெரியார்கள் தெலுங்கிலும், தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நூல்கள் மூலமாகப் பொது ஜனங்களுக்கிடையே சங்கீத வித்தையை அபிவிருத்தி