பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சிறந்த சொற்பொழிவுகள்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.

என்னும் பொன்மொழி, நாம் இறக்கும்வரை படிக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. தற்காலத்தில் முதியோர் கல்விக்கு அரசியலாரும் நன்முயற்சி கொண்டிருப்பது பாராட்டுதற்குரியதாகும்.

ஐயந் தீர்க்கும் நூல்களில் தெய்வத் திருக்குறளும், தொல்காப்பியமும், திருக்கோவையாரும் தலைசிறந்தவை. “செல்வம் புலனே புணர்வு ........ என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தில் புலன் என்பதற்குக் கல்விப் பயனாகிய அறிவுடைமை இன்பத்தைக் கொடுக்கும். பெருமிதமென்பது, கல்வி, தறுகண், இசை கொடை இவற்றால் வருவது. எனவே இன்பமும் பெருமிதமும் பெறக் கல்வி வேண்டும். ஒருவன் இவ்விரண்டும் வேண்டுவதின்றெனின், தன்னைப் பற்றிப் பிறர் புகழ்தல் வேண்டும் என்ற எண்ணமாவது இல்லாமலிரான். இல்லறவியலின் முடிவில் திருவள்ளுவர் "புகழ்" என்னும் அதிகாரம் அமைத்திருப்பது இக்கருத்தைப் புலப்படுத்தும். -

கொடுத்து வருவது புகழ். அடித்து வருவது பிரதாபம்.

கல்வி கற்றுப் பிறர்க்கு அதனைப் போதிப்பதால் வரும் புகழ் சிறந்த புகழ். ஒவ்வொரு வரும் தம் வீட்டு மொழியையும் நாட்டு மொழியையும் கற்க வேண்டும். தமிழ்மொழி நமக்கு விட்டு மொழியாகவும்,

நாட்டு மொழியாகவும் இருக்கிறது. தமிழ்மொழி நம்மை வளர்த்து இன்பங் கொடுக்கும் மொழியாகும். -

தமிழ்மொழியில் குறைபாடுகள் உள்ளன என்று கூறுவாரெல்லாம் அறிவில் குறையுள்ளவர்களே யன்றி உண்மையில் மொழி குறைபாடு உடையதன்று. அன்னோர் கூற்று, வேற்றுவழி நுழைந்தானொருவன் வழி தவறிவிட்டது என வழியின்மேல் பிழையேற்றிக்கூறும் கூற்றுப் போலாம். தமிழ்மொழியைத் தெய்வமென்று போற்றல் வேண்டும். 'தமிழ்த் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்” என்று கருணைப் பிரகாசர் பாராட்டிப் பாடியுள்ளார். ! . -

மனம், வாய் இவற்றின் வினையாகிய நினைத்தல், ஏத்துதலோடு, இனம் பற்றி மெய்யின் வினையான வணங்கு தலையும் உடன் கூட்டிப் பொருள் கொண்டு மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் நாம் தமிழ் மொழியைப் போற்றல் வேண்டும். “முத்தமிழும் ஆனான் கண்டாய்” எனத் திருநாவுக்கரசரும் தமிழ்மொழியைத் தெய்வமாகப்