பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 103 காட்ட முயல்கின் ருர் என்றும் கண்டோம். ஊழுண்மையை விளக்கிக் காட்ட விரும்பியதன் காரணம் யாது ? இதுதான் காரணம் என்று அவர் தனியாகக் கூறவில்லை. ஆயினும் அவர் கொலைக்களக்காதையின் இறுதியில் கண்ணும் இருவினையும், கண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன் கேள்வன் காரணத்தால் - மண்ணில் வ&ளயாத செங்கோல் வளைந்ததே, பண்டை விளேவாகி வந்த வினே என்று கூறுவதிலிருந்து அவருடைய மனத்தில் இரண்டு காரணங்கள் இருந்தன என்று அறியக் கிடைக்கின்றது. ஒன்று ஊழுண்மையைக் கூறி உலகத்தாரை ஒழுக்கத்தை மேற்கொள்ளச்செய்தல், மற்றென்று நல்லோர்க்குத் தீது ஏற்படுவதன் காரணம் ஊழுண்மையே என்று காட்டுதல். இவ்விரண்டையும் தனித்தனியே ஆராய விரும்புகின்றேன். நற்செயல்களையே செய்யவேண்டும், தீச்செயல்களைச் செய்யலாகாது என்று ம க் க ளி ட ம் கூறினல்மட்டும் போதாது. அவர்கள் ஏன் என்று கேட்பார்கள். காரணத்தைக் கூறினல்மட்டுமே அவர்களுடைய கருத்து நல்லதை நாடவும் தீயதை விலக்கவும் செய்யும். அதனுல் இளங்கோவடிகள் கண்ணும் இருவினைகள், கண்ணுமின்கள் நல்லறமே அதாவது ஒரு பிறப்பிற் செய்த வினைகள் மறுபிறப்பில் வந்து பயன்தரும், நல்ல செயல் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். ஆதலால் நல்ல செயல்களே செய்யுங்கள் என்று கூறுகின்ருர். அல்லித்தாள் அற்றபோழ்தும் அருத நூல், அதனேப்போலத் தொல்லேத்தம் உடம்புநீங்கத் திவினை தொடர்ந்து நீங்கா, (சிந்தா. 2876)