பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 105 - === _ - ' நிஷ் காம கருமம்' அதாவது பயன் விரும்பாத பணி என்று கூறும். அவ்வாறு செய்பவனை வள்ளுவர் இன்பம் விழையான் வினேவிழைவான் என்று அழகாகக் கூறுகின்ருர். பயன் பெறக் கருதி ஒழுகுவதை வாணிகமாகவே பண்புடையோர் கருதுவர். அதல்ைதான் சங்கப்புலவர் முடமோசியார், ஆய் என்னும் அரசனுடைய வண்மையைக் கூறும்போது இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவினே வணிகன் ஆஅய் அல்லன், பிறரும் சான்ருேர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே (புறம் 134) என்று கூறுகின் ருர் ஆய் அறத்தை விற்றுப் பலன் பெறும் வாணிகன் அல்லன், சான்ருேர் நெறி என்று அறம் செய். பவன். அதுவே உண்மையான ஒழுக்கம். அப்படியாயின் அறத்தின் பயன்தான் யாது ? அறம் செய்தால் அதற்குப் பயன் கிடையாதோ என்று கேட்பின் அக்கேள்விகளுக்கும் வள்ளுவப் பெருந்தகை விடை கூறுகின் ருர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ( 45) இல்வாழ்க்கை என்று கூறியதால் இது இல்லறத்தில் நிற்பவனுக்கே உரியது என்று எண்ணலாகாது. உலகத்தில் மக்களில் மிகச் சிலரே துறவிகள், அவர்களுக்கும் இல்லறத். தார் ஒழுக்கம் விலக்கன்று இக்குறள் கூறுவது யாதெனில் மனிதனுடைய வாழ்க். கையின் பண்பு அ ன் பு ம் அறமுமுடைய ஒழுக்கமே. அதுவே அதன் பயனுமாகும். அறத்தின் பயன் அறமே என்று எமர்சன் என்னும் அமெரிக்க ஞானி கூறுவது உண்மையே,