பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சிலப்பதிகாரம் சம அந்தஸ்துடையவர்களாக ஒருவரையொருவர் மணந்து கொள்வது என்பதில்லை. தலைவனுக்கே ஆன்மாவுண்டு. அவனே மனிதன். தலைவி வெறும் பொருளே. ஒருவர் கொடுக்க ஒருவர் பெறும் வஸ்துவே. தலைவி எ ன் ப து வெறும் உபசார வழக்கே. அரசன் மனைவியை அரசி என்பர். ஆனல் அவளுக்கு அரசனுக்குரிய அரசியல் அதிகாரத்தில் அணுவளவுகூடப் பங்கு கிடையாது. அதுபோலவேதான் தலைவன் தலைவி உறவும். இது கடவுளுக்கும் மனிதனுக்கு மிடையிலுள்ள உறவைக் சைவசித்தாந்தம், கூ று ம் ஆண்டான் அடிமைத் திறமே. தலைவன் ஆண்டான்; தலைவி அடிமை. அடிமையும் தலைவன் அனுபவிக்கும் மற்ற வஸ்துக்களைப்போன்ற ஒரு வஸ்துவே. நச்சிர்ைக்கினியர் களவியல் முதற் சூத்திரத்தின் உரையில் தலைவியைக் குறிப்பிடும்போது பிறர்க். குரியள் என்றுகூடக் கூருமல் பிறர்க்குரித்து என்று கூறு வது அறிதற் பாலது. மேற்கூறிய இரண்டு சூத்திரங்களிலிருந்தும் அறியக் கூடிய மற்ருெரு விஷயம் இது. சாதாரணமாகக் கற்பு என்னும் சொல்லப் பெண்ணின் தன்மை அல்லது செயலைக் குறிக்கவே பயன்படுத்துகின்ருேம். ஆல்ை தொல்காப்பியர் இந்த இரண்டு சூத்திரங்களிலும் ஆணின் செயலைக் குறிக்கவே பயன்படுத்துகின்றர். ஆகவே ஆணின் கற்பு ஒருத்தியைப் பிறனிடமிருந்து அடிமையாகப் பெற்று அவளுடன் வாழ்க்கை நடத்துவது என்பதாகும். தொல்காப்பியர் கற்பு என்னும் சொல்லை ஆ ண் மகனுடன் தொடர்புபடுத்திக் கூறினும் பெண்மகளுடனும் தொடர்புபடுத்திக் கூ று கி ன் ரு ர். அவர் கிழவோள் மாண்புகள் அதாவது மனைவியின் சிறப்பியல்புகள் இவை என்று கூறும்போது (தொல். பொருள், 152) கற்பை முதற் கண் வைக்கின்றர் அவற்றுடன் மனைவி கற்பு வழிப்ப்ட்டவள் (தொல். பொருள். 233) என்றும், மனைவி செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனக் கொள்பவள் (தொல்.