பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சிலப்பதிகாரம் மெல்லாம் ஆண் அனுபவிப்பதற்கே என்பதாகும். ஆகவே பெண் ஆளில்லை, ஆண் அனுபவிப்பதற்காகவே, ஆனுக்கு அடிமையாயிருப்பதற்காகவே படைக்கப்பட்டவள் எ ன் பதாகும். இனித் திருவள்ளுவர் கற்பென்னும் திண்மை’ என்று கூறுவதன் பொருள் யாது ? ஆணுக்கும் பெண்ணுக்கும் மனங்கலங்கா நிலை அமையவேண்டிய சந்தர்ப்பங்கள் எழுவதுண்டு. பெண்ணுக்கு எழும் சந்தர்ப்பங்களில் சில தனிப்பட்டவை. அதனுல் அத்தகைய சந்தர்ப்பங்களில் அமையும் மனவுறுதி தனிச் சிறப்புடையது. அந்த மன. வுறுதியே கற்பாகும் என்பது வள்ளுவர் கருத்து. ஆனல் பெண்ணிடம் கற்பு என்னும் தி ண் ைம அமையவேண்டிய விசேஷ சந்தர்ப்பங்கள் இவை என்று வள்ளுவர் கூறவில்லை. அவர் கூருவிடினும் இரண்டு குறள் களில் குறிப்பிடுகின்ருர், -* தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை என்பது ஒரு குறள். இதன் கருத்து மனைவி கணவனேயே தெய்வமாகப் பாவித்து வழிபடுவாள் என்பதாகும். அவள் கணவனைத் தெய்வமாக வழிபட்டு வந்தபோதிலும், அவன் அவளுக்குத் தீங்கு செய்தால் அப்போது அவள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் ? அவனுடைய தீங்கைக் கண்டு பொறுக்க முடியாமல் இவனைத் தெய்வமாக வழிபடுகிறேன், தெய்வம் தீங்கு செய்யாதே, இவன் செய்கின்ருனே, இவனை வணங்காமலிருந்தால் என்ன ?, என்னும் எண்ணம் எழுவது இயல்பு. ஆனல் அவள் கற்பு என்னும் திண்மை யுடையவளாக இருக்கவேண்டுமல்லவா ? ஆதலால் அவள் அத்தகைய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் மனத்தை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். என்ன தீங்கு செய்தாலும் இறைவனே என்று ஏற்கவேண்டும். தெய்வந் தொழாள்’ என்னும் குறளில் பொதிந்துள்ள கருத்து இது.