பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 25 (தொல்: பொருள்: 187) ஆகவே தலைவன் ஒரு மாதத்தில் பதினேந்து நாட்கள் மட்டுமே பரத்தையிடம் தங்குவான். மற்றப் பதினைந்து நாட்களும் மனைவியுடனேயே தங்குவான். இவ்வாறு நிகழவே மனைவி கணவனுடைய பரத்தைமைக்காக மனம் புண்ணுக வருந்தினும். அவ்வருத்தத்தை ஒரளவேனும் மாற்றும் மருந்தாகக் குழந்தை பெற்று வளர்க்கும் பேற்றைப் பெறுவாள். ஆணுல் கண்ணகிக்கோ இந்தப் பேறு கிடைக்க வழியில்லாமல் செய்துவிட்டான் கோவலன், அவன் மாதவி வீடு சென்றவன், அங்கேயே தங்கின்ை. மூதாதையர் தேடி வைத்த செல்வத்தை யெல்லாம் தொலைத்த (சிலப்: 9; 70) பின்னர்க் கண்ணகியின் நகைகளே ஒவ்வொன் ருக வாங்கிச் செல்வதற்குமட்டுமே வீட்டை நாடினன். இவ்வாறு கோவலன் மாதவியே சதம் என்று அவ. ளுடன் தங்கிப் பணத்தையெல்லாம் பாழாக்கினுன், குலந்தரு தொழிலைச்செய்து பொருளிட்டாது, வறுமொழி யாள ரொடும் வம்பப் பரத்தரொடும் குறுமொழி கோட்டி நெடுருகை புக்குப் பொச் சாப்புண்டு பொருளுரை யாளர் நச்சுக் கொன்ருன் " (சிலப்-16 : 68-67) தாய்தந்தையர்க்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்யவில்லே. அவர்கள் மாதவி நட்பை விடுக்கப் பணித்த போது அவர்கள் சொல்லேப் பேணுது நடந்தான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை அறவே புறக்கணித்தான். அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல் ல்ோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் . ஆகிய மனேயாளுடன் கூடிச் செய்யவேண்டிய இல்லற தருமகாரியங்களேச் செய்யாது, அவற்றைச் செய்வதால் கண்ணகி பெறும் மகிழ்ச்சியை இழக்கச்செய்தான், நெறி. யின் நீங்கியோராகிய பரத்தையர் வாழ்க்கையுடன் பொருந்தி