பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு *33 முரணுக எத்துணை இழிஞளுயினும் மனைவி கணவனே இறைவனுகவே கருதுதல்வேண்டும் என்று மனு கூறும் சுலோகத்தைச் சுட்டிக் காட்டுகின்ருர். இந்த சுலோகத்துக்கும் தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் என்னும் குறளுக்கும் யாது வித்தியாசம்? இரண்டின் கருத்தும் ஒன்றேயல்லவா ? திருவள்ளுவர் இத்தகையவனைத் தொழுவாள் என்று கூருததால் எத்தகையவனுயினும் இழிந்தவயிைனும் தொழுவாள் என்றே கருதுகின்ருர் என். பதில் சந்தேகமில்லை. மகாத்மா காந்தியடிகள் மேற்கண்ட மனுவின் சுலோ. கத்தையும் பேராசிரியர் கொடுக்கும் யாக்ஞவல்கியர் முதலி. யவர்களுடைய சுலோகங்களேயும் எழுதி இவை அனைத்தும் அறநெறிக்கு ஒவ்வாதன, அதனுல் அவற்றைத் தவருனவை என்று நீக்கிவிடவேண்டும் என்று கூறுகின்ருர் (ஹரிஜன் 28—11—1936). மகாத்மா காந்தியடிகள் மேலும் கூறுவதாவது : "இந்து மதமானது மனைவியைக் கணவனுக்கு அடிமையாக்கி அவளுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லாமற் செய்து அவ. னுடைய நலத்திலேயே அவளுடைய நலத்தை மறைந்துவிடச்செய்தது தவருகும். மனேவி கணவனுடைய அடிமை. யல்லள். அவனுடைய வாழ்க்கைத் துணையே, அதனுல் கணவனுக்குள்ள உரிமைகள் கடமைகள் அனைத்தும் அவளுக்குமுண்டு. இருவரும் இல்லத்தில் சம பங்கு உடைய. வர்கள் ' என்பதாகும் (யங் இந்தியா 8-10-29, 2 1-5-31) இந்தக் கருத்தே அறிவுக்கும் அறத்துக்கும் ஒத்ததாகும். ஆதலால் மகாத்மா காந்தியடிகள் இக்கருத்துக்கு முரணுக வடமொழி மறைநூல்களிலுள்ள சுலோகங்களைத் தவறென்று தள்ளிவிடத் தயங்கவில்லை. அதுபோல் நாமும் நம்முடைய தமிழ் மறையிலுள்ள தெய்வந் தொழாஅள் என்ற குற8ளயும் பெண்கணப் பொருளாகக் கூறும் குறள்களையும் பெண்ணின் நலம் பிறர்துய்ப்பதற்கே என்று கூறும் குறளையும் தவருனவை என்று நீக்கிவிடுதல்வேண்டும்.