பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 35 4. நான் பிழை செய்யவில்லை. பிறர் துன்பம் செய்கின்றனர், அதை நான் அவருக்குத் துன்பம் செய்யும் முறையில் எதிர்க்கின்றேன். அப்போது அவர் செய்யும் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்க்குத் துன்பம் செய்ய முயல்கின்றேன். அந்தப் பொறுமையும் தவமாகாது, போர் வீரமேயாகும். 5. நான் பிழை செய்யவில்லை. பிறர் துன்பம் செய்வதை அவர்க்குத் துன்பம் செய்யாமல் எதிர்க்கிறேன். அதற்காக அவர் செய்யும் துன்பத்தைப் பொறுக்கின்றேன். திரும்பி அவர்க்குத் துன்பம் செய்வதில்லை. அந்தப் பொறுமையே தவமாகும். அநியாயத்தை அஹிம்சா முறையில் எதிர்ப்பதும் அப்போது உண்டாகும் துன்பத்தைப் பொறுப்பதுமே உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை என்று வள்ளுவர் கூறும் தவத்திற் குருவாகும். கண்ணகி கோவலன் செய்த துன்பத்தைப் பொறுத்தது கற்பின் இலக்கணத்தைப் பற்றித் தவருன கருத்துடைமையேயன்றித் தவமன்று. கணவன் இழிஞயிைனும் இறைவனுகக் கருதுதல் மனேவியின் கடமையாதலால் அவனே எதிர்த்தல் என்பது கனவிலும் கருதத் தக்கதன்று என்ற கோட்பாடு சமுதாய முழுவதும் பரவியிருந்ததால், கண்ணகி கோவலனுடைய தவருன ஒழுக்கத்தைக் கடிந்து கூறுவது எங்ங்னம் ? அதனுலேயே அவள் தன் வருத்தத்தை யாரிடமும் கூருமலும் வெளியில் தெரியுமாறு காட்டாமலும் இருந்தாள். கோவலன் பணமில்லாமல் போனபிறகு அவளிடம் நகையைக்கேட்க வந்தபோதும் அவன் இழிதொழிலுக்குத் தரமாட்டேன் என்று கூருமல், அவள்

  • நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிக் .

கழற்றிக் கொடுத்துவந்தாள். கோவலன் வந்தபோது அவனிடம் போற்ரு ஒழுக்கம் புரிகின்றீர், இரு முதுகுரவர் ஏவலும் பிழைக்கின்றீர், என்னே