பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 61 செய்துவிட்டு இரவிலேயே இவரிடம் வர இயலும். அதல்ை இவர் தம்முடைய உடலை விற்கும் வாணிகத்தை இரவி. லேயே நடத்துபவர். அதல்ை இவர்கள் இராக்கடை வேசையர் என்றும் கூறப்படுவர் (இந்திர. 50 அரும்ப). கணிகையர் என்பவர் பரத்தையர். இவரைக் காவற்கணிகையர் என்று கூறுவதன் காரணம் யாது ? மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவலின்றெனில் இன்ருல் (மணி 22:209) அதாவது அரசன் காவல் செய்யாவிடின் மாதவர் தவமும் மகளிர் கற்பும் அழிந்துபோகும் என்று புலவர்கள் கூறுவர். காவலன் பெண்களின் கற்பைக் காக்கும்வழி யாது ? ஆடவர் குலமகளிரை நாடி அவர்களுடைய கற்பைக் கெடுக்காமலிருப்பதற்காகப் பரத்தையர் என்ற ஒரு வகுப்பினரை ஏற்படுத்திப் பாதுகாப்பதேயாம். சமூகத்தில் ஏராளமாக வுள்ளவர் தாழ்ந்தவரே. அவர்களுக்கு உதவும் பரத்தையரே அரசருக்குத் துணையாக நின்று குலமகளிர் கற்பைக் காப்பவ. ராவர். அத்தகையவரே இராக்கடை வேசையர். அதகுல்தான் அவர்கள் காவற்கணிகையர் என்ற பெயர் பெற்றனர். இவ்வாறு அரசன் முதல் அனைவரும் பரத்தையரை விரும்பினர் என்பதும், அவர்களே இளங்கோவடிகள் கூடப் பெரியோர் என்று போற்றியிருப்பதும் அக்காலத்து மக்கள் காமக்கடலில் எத்துணைத் திளைத்தார்கள் என்பதைத் தெற். றென விளக்கும். பண்டைக்காலத்தில் காவரிப்பூம்பட்டினம் புகார் என்ற பெயரால் வழங்கிவந்தது. அதனைப் புலவர்கள் பூம்புகார் என்று சிறப்பித்துக் கூறுவர். பூம்புகார் என்பது பொலிவுபெற்ற புகார் நகரம், என்று பொருள்படும். நாம் இதுவரை புகாரில் கண்ட .ெ பா லி வு காமக்களியாட்டமேயாகும். இப்பண்புடைய நகரத்தைப் பூம்புகார் என்ற அழகிய சொல்லால் புலவர்கள் புகழ்வது மாங்குடி மருதர்ை மதுரை.