பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சிலப்பதிகாரம் - இளைஞர்களுடன் ஊரையடுத்துள்ள இலவந்திகை என்னும் பொழில்களில் விளையாடுவர். இவ்வாறு புனலிலும் பொழிலிலும் ஆடி இளேத்த மகளிர் மாஆலயில் பூஞ்சேக்கையில் அமர்வர். காதலர் அவர்களுக்குக் களைப்புத்திரப் பணி செய்வர். இப்பரத்தையர் பொழுதுக்கேற்பப் பூச்சூடி விளையாடுவதுபோல் பருவத்துக்கேற்பவும் நடந்துகொள்வர். கார் காலத்தில் பூத்தொழில் மிக்க செம்பட்டை மேகலைமீது உடுத்துவர். கூந்தலில் செங்குடப்பூவை முடிப்பர். சந்தனத்தையும் குங்குமச் சுண்ணத்தையும் மார்பில் அப். புவர். கழுத்தில் பவளக்கோவையுடன் செங்கொடுவேரிப்பூமாலையை அணிவர். இவர்கள் கூதிர்க்காலத்தில் நாலாம் மாடியில் தங்குவர். வாடைக்காற்று வந்து நடுக்காதபடி குறுங்கண்கள் உடைய சாளரங்களே மூடுவர். அகிலால் நெருப்பு மூட்டி அதன் அருகே நறுஞ் சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு” அமர்வர். இவர்கள் முன் பனிக்காலம் வந்தபோது தங்கள் மாளி. கையின் மேனிலையாகவுள்ள நிலா முற்றத்தில் தங்கள் காதல் மைந்தருடன் உட்கார்ந்து இளவெயில் நுகர்வர். இவ்வாறு பொருட் சிறப்போடும் புலனுகர் இன்பச் சிறப் போடும் வாழ்ந்ததாழ்ந்ததரப் பரத்தையர் வீதிகள் எல்லாவற்றிலும் மெதுவாக நடந்து கோவலன் பின்னர் அடுத்த தரத்துப் பரத்தையர் வீதிகளுக்கு வந்து சேர்ந்தான். இவர் கஆள அடியார்க்குநல்லார் அரசனேக் காக்கும் மகளிர் என்றும், அரசன் மேனியைத் தொட்டு விளையாடும் உரிமை யுடையவர் என்றும் கூறுகின்ருர். இவர்களுக்கு அரசன் கூடாரப்பாண்டி, கடகத்தண்டு, பல்லக்கு முதலிய வாகனங்களில் செல்லும் உரிமையை அளிப்பான். இவர்களுக்குச் சிலதியர் சாமரையிடுவர், பொன் வெற்றிலப்பெட்டி பிடிப்பர், இவர்கள் எங்கேனும்