பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சிலப்பதிகாரம் - - --- அணங்கென உருத்த சுணங்கு அணி ஆகத்து, ஈர்க்கிடை போகா ஏரிள வனமுலே, நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூர், உண்டென உணரா உயவும் நடுவின், வண்டிருப் பன்ன பல்காம் அல்குல், இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கில், பொருந்துமயிர் ஒழுகிய திருந்ததாட் கொப்ப வருந்து தாய் காவிற் பெருத்தகு சீறடி (25–42) என்று தலைமுதல் அடிவரை அழகாக வருணிக்கின் ருர். இந்த அழகியரைக் கண்டு அரசர்கள் காமுற்றனர் என்பது மட்டுமன்று. அதற்கே அவர்களுடைய ஆடலேயும் பாடலையும் பயன்படுத்தினர் என்றுமாம். திருத்தக்கதேவர் கிளே நரம் பிசையும் கூத்தும் கேழ்த் தெழுந் தின்ற காமம் (சீவக. 25.98) என்று கூறுவதற்கு நச்சிஞர்க்கினியர்

  • அழகைக் கண்ட அளவில் காமவேட்கை விளைவித்

தற்குக் கூத்தையும் பாட்டையும் நடத்துதலிற் பிறந்தது காமம் என்று உரை கூறுகின் ருர். அதன் பொருள் யாதெனில் அழகான பெண்ணேக் கண்டால் காமவுணர்ச்சி எழுந்தாலும் எழலாம், எழாமலு. மிருக்கலாம், ஆளுல் அப்பெண் ஆடவும் பாடவும் செய்தால் காமவுணர்ச்சி கட்டாயமாக எழுந்தே தீரும் என்பதாம். இசையும் கூத்தும் காமத்தை எழுப்பும் ஆற்றலுடையன என்பதைக் கரும்பிள்ளைப் பூதளுர் என்ற சங்கப் புலவரும் பத்தாம் பரிபாடலில் பருக்கோட்டி யாழ்ப்பக்கம் பாடலோடு ஆடல் அருப்ப மழிப்ப அறிந்த மனக்கோட்டையர் அதாவது யாழின் கூறு, மிடற்றுப்பாடல், ஆடல் ஆகியவை மனவுறுதியை அழிக்க அழிந்த தன்மையுடைய மகளிரும் மைந்தரும் என்று கூறுவதிலிருந்து அறியலாகும்.