பக்கம்:சிலம்பொலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 101

தன்மனை புகுந்து, தன் வாடிய மேனி கண்டுவருந்தும்

கோவலனுக்குக் கண்ணகி பொற்றொடியோடு வேறு சில சிறந்த அணிகளும் அணிந்தே காட்சியளித்துள்ளாள்.

'தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு' என ஆசிரியர் கூறுவதும், "சிலம்புளி, கொள்ளுங்கள்” என்ற கண்ணகியை விளிக்கும் கோவலன் சேயிழை கேள்” என விளித்தலும் காண்க. (சிலம்பு: 9,67-68; 73) ஆக,

கோவலன் மாதவியை விடுத்துக் கண்ணகியை அடையும் போது, கண்ணகி, சிலம்பு தவிர்த்த பிற அணிகளை யெல்

லாம் அறவே இழந்து விடவில்லை பைந்தொடியும், வேறு சில சிறந்த அணிகளும் அவள்பால் இருந்திருக்

கின்றன என்பதை இத்தொடர்கள் உறுதி செய்வது

காண்க.

சிலம்பு முதலாக, இழந்த அணிகளோடு பிற செல்வம் ஈட்ட மதுரைக்குப் புறப்பட்ட கோவலன்-கண்ணகியின் பால், சிலம்பு தவிர்த்த வேறு அணிகள் எதுவுமே இல்லை; சிலம்பை மட்டுமே கொண்டு சென்றனர் எனக் கூறுவது பொருந்துமா?

மதுரைக்குச் செல்லும் த மக்கு வழித்துணையாக வரும் கெள ந்தி அடிகளிடம், கண்ணகியை அறிமுகம் செய்து வைக்கும் கோவலன், கண்ணகியைக் கால்களில் பாடகமும், தோளில் கொடிவளையும் அணிந்த கோலத். தில்தான் அறிமுகம் செய்துள்ளான். கண்ணகியின் மென்மைத் தன்மையை உணர்த்தும் வகையில், அவள் அடியின் மென்மைத் தன்மையைக் குறிக்கும் நிலையில், அவ்வடிகளில் பாடகம் கிடந்து அழகு செய்வதைப், 'பாடகச் சீறடி பரற் பகை உழவா'என்றும்(சிலம்பு:10:52)

சில ம7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/107&oldid=560730" இலிருந்து மீள்விக்கப்பட்டது