பக்கம்:சிலம்பொலி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சிலம்பொவி

கோலம் காணாது ஒழிக. எனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் பு சி ந் து அறங் கொள்ளவும்' (சிலம்பு 27 : 1.03.108) என மாடல மறையோன் செங்குட்டுவனுக்குக் கூறுவது காண்க.

கோவலன் கொலைகுக் காரணமான தென்னவனைத் "தீதிலன்' என்று கூறிய கண்ணகி, கோவலன் கொலைக்கு மாதவி பாடிய கானல்வரியே காரணம் என மாதவி குறித்து. உலகோர் கூறும் பழியுரையை மறுத்து அவள் தீதிலள் எனக் கூறவில்லை. ஆகவே, மாதவி குற்றம் உடையவளே என வாதிடுவர் சிலர்.

ஒரு வழக்கில் தொடக்க நிலையில் உண்மைகளை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாதே, ஒரு தவறான தீர்ப்பினை வழங்கி விட்ட ஒரு நடுவர், பின்னர், உண்மையை உணர்ந்து கொள்ளும் சூழ்நிலை வாய்த்து விட்டதும், தான், முன்பு வழங்கிவிட்ட தவறான தீர்ப் பினை மறுத்து, நல்ல தீர்ப்பு வழங்க வேண்டுவது இன்றி யமையாதது. அத்தகைய நிலை, சிலப்பதிகாரப் பாத்திரங்களில் மூவருக்கு ஏற்பட்டு விட்டது.

கானல்வரி பாடுங்கால், கோவலன் உள்ளத்தில் எவ்விதக் குறிப்பும் கொண்டிலன் என்பதும், மாதவி தன் ாம் மகிழவே பாடினான் என்பதும், உண்மையாகவே ருக்கலாம். ஆனால், அவன் பாடிய கானல் வரிகளின் ப்பொருள், ஒரிளம் பெண்ணின்பால் காதல்கொண்டு த் திழந்து நிற்கும் ஒர் இளைஞன் கூற்றாக அமைந்து ட்டது என்பதை மறுக்க இயலாது. அப்பொருள் ;ானிக்கப் பாடிவிட்ட அவன்,அப்பாடல் கேட்டு, மாதவி ன் பாடிய வரிப்பாடல்களில், ஒரிளைஞன்டால் காதல் ாண்டு கருத்திழந்து நிற்பாளோர் இளம் பெண்ணின் துறையே கருப்பொருளாக ஏற்றிப் பாடி முடித்த நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/120&oldid=560743" இலிருந்து மீள்விக்கப்பட்டது