பக்கம்:சிலம்பொலி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 - சில ம்பொலி

கொல்லன் தன் சொல்கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்...கெடுக என் ஆயுள்!” (வழக்குரைகாதை:74-77) எனத் தனக்குத் தானே கொலைத் தண்டம் விதித்துக் கொண்டு உயிர் விட்டு மறு தீர்ப்பு-நல்ல தீர்ப்பு வழங்கி প্রাtrator, х

கோப்பெருந்தேவியின் காலணியைக் களவாடினான் எனக் குற்றம் சாட்டித் தன் கணவனுக்குக் கொலைத் தண்டம் கொடுத்துத் தென்னவன் தீர்ப்பு வழங்கிய கொடுமையைத் தன் கண்களால் கண்டு,தன் காதுகளால் கேட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு கண்ணகிக்கு வாய்க்க வில்லை என்றாலும், அது செய்தான் தென்னவன் என்பதைப் புறநகர்ப் போய் அஃது அறிந்து வந்தார் வாய்க் கேட்டு அறிந்து கொண்டாள் கண்ணகி,

"அரசுறை கோயில் அணியார் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித்தனரே”

- துன்பமாலை:25-28

எனக் கூறிக் கொலைக் குற்றம் செய்த குற்றத்திற்கு உள்ளானவன் தென்னவர் கோனே எனத் தெளிவாகக் கூறி வைத்தனர் அவர்கள்.

அவர்கள் அது சொல்லவே, தென்னவன் குற்றம் புரிந்: தவன் என்ற முடிவினைக் கண்ணகியும் கொண்டு விட் டாள். அதனால், "மன்னவன் தவறு இழைப்ப அன்பனை இழந்தேன்-செம்மையின் இகந்த கோல் தென்னவன்” (துன்பமாலை: 36,44)-"முறையில் அரசன் தன் ஊர்”"பார் மிகுபழிதுாற்றப் பாண்டியன் தவறு இழைப்ப," "மன்பதைபழிதுற்ற மன்னவன் தவறிழைப்ப,"வைவானின் தப்பிய மன்னவன் கூடல்', 'திவேந்தன் தனைக்கண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/124&oldid=560747" இலிருந்து மீள்விக்கப்பட்டது