பக்கம்:சிலம்பொலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 1() சில ம்பொலி

இதேபோல், மாலையை அடுத்துக் காலை வருவதை உணர்த்தும் வரிகள் குறுந்தொகையிலும் புறநானூற். றிலும் வந்துள்ளன:

"மாலை பெய்த மணங்கமழ் உந்தியொடு

காலைவந்த காந்தள் முழுமுதல்”

இது குறுந்தொகை (361). மாலைப் பொழுதில் மலை யிடையே மழைபொழிய, அம்மழை நீர் ஒன்று திரண்டு பெருவெள்ளமாய்ப் பாய்ந்தோடி வருங்கால், அவ் வெள்ளம் அடித்துக் கொணரும் காந்தள் மலரைத் தலைமகள் கைக்கொண்டு மகிழ்ந்ததைக் கூறும் இப் பாட்டில் மாலையை அடுத்து வரும் காலை, இடையில் ஓர் இரவு நின்று கழிய வந்த காலைதான்.

அதே போல்,

"மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி”

". . என்ற புறநானூற்றுப் பாட்டில் (149) வரும் காலையும் மாலைக்குப் பின், ஓர் இரவு இடைவந்து கழியவந்த காலையையே குறிக்கும். இதற்குச் சிறிது விளக்கம் தேவை. கண்டீரக்கோ பெருநள்ளி என்ற கொடை. வள்ளலைப் பாடிய புலவர் வன்பரணர், தன்னைப் பண்ணிசைத்துப் பாராட்டும் பாண்ர்க்கு, நள்ளி வாரி வாரி வழங்கிவிடுவதால்,அப்பாணர் மெய்ம்மறந்து போக, அதனால், அவர்கள் காலையில் வாசிக்க வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் வாசிக்க வேண்டிய செவ்வழிப் பண்ணைக் காலையிலுமாக, முறைமாறி இசைப்பாராயினர் எனக் கூறுவதன் மூலம், அவன் புகழ் பாடும். இப்புறநானூற்றுப் பாட்டால், ாணர் காலமுறை மாறிப் பாடிய நிலையை எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/16&oldid=560639" இலிருந்து மீள்விக்கப்பட்டது