பக்கம்:சிலம்பொலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 . சிலம்பொவி ,

வில் கண்டாள்" என்ற இளங்கோவடிகளார் கூற்றில், காலை முன்வர, அதைத் தொடர்ந்து மாலை வர, அடிகளார் பாடியிருக்கும் நிலை வேறு. ஈண்டு, காலை முன் நிற்கிறது; மாலை பின் நிற்கிறது; இந்நிலை வேறு.

கோவலன் பிரிவால் வருந்திய மாதவி, தன் மன அமைதிக்காக, "மாலை வாராராயினும், காலை காண்டுவம்” எனக் கூறிய போது, அவள் குறிப்பிடும் காலை, கோவலன் பிரிந்த மாலையைத் தொடர்ந்து வந்த இரவு கழிய வந்துற்ற மறுநாள் காலை ஆகும். இதைக் குறுந்தொகை, புறநானூற்றுப் பாக்கள் இரண் ஆன் மூலம் விளக்கியுள்ளேன்.

ஆனால், காலையில் வழி அனுப்பியவள், மாலையில் இறந்து கிடக்கும் கோவலனைக் கண்டாள், என இளங்கோ அடிகள் கூறும் கூற்றில் வரும் காலையும் மாலையும், ஒரு நாள் காலையும், அன்றைய மாலை யுமே அல்லாது, ஒரு நாள் காலையும், மறுநாள் மாலை யும் ஆகாது. ஒரு நாள் காலையையும்,ஆன்றைய:மாலை யையும் குறிக்கும் வகையில், காலை, மாலை ஆகிய சொற்கள் இடம் பெற்றிருக்கும் வரிகள் குறுந்தொகைப் பாடல்கள் இரண்டிலும், ஐங்குறு நூற்றுப் பாடல் ஒன்றி ஆலும், புறநானூற்றுப் பாடல்கள் இரண்டிலும் இடம்

பெற்றுள்ளன. அவை வருமாறு :

"காலையும் பகலும், கையறு மாலையும்'

காலை வந்து மாலைப் பொழுதில்

நல்லகம் நயந்து” -

- У . -குறுந்தொகை 32; 347.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/18&oldid=560641" இலிருந்து மீள்விக்கப்பட்டது