பக்கம்:சிலம்பொலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

24 - சிலம்பொலி

வெள்வாள் வீசலும் ஆகிய நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, விரைந்து நடைபெறக் கோவலன் கொலை யுண்டு வீழ்ந்தது நண்பகற் போதிற்குச் சற்று முன் பாகவே முடிவுற்றிருக்க வேண்டும்.

--- கோவலன் கொலை முதல் நாள் நிகழ, ஆய்ச்சியர் குரவை மறுநாள் நிகழ்ந்தது எனக் கொள்வதா? இரண்டையும் ஒருநாள் நிகழ்ச்சிகளாகவே கொள்வதா?

கோவலன் கொலை முதல் நாள் நிகழ்ச்சி குரவை மறுநாள் நிகழ்ச்சி என்ற முடிவு கொண்டுள்ளார் ம. பொ. சி. ஆய்ச்சியர் இல்லத்திலே கோவலன் உணவு கொண்டn ன் என்றால், தயிரோ, மோரோ இல்லாமலா உணவை உண்டிருப்பான்? குடப்பால் உறையாத நிலையில், கோவலன் உண்ணுவதற்குத் தயிரோ மோரோ கிடைத்திருக்குமா?’ (பக்கம்: 1371 இவை ம. பொ. சி. அவர்களின் வினா.

பால் தோயவில்லை; நெய் உருகவில்லை; ஆகவே பாலும், நெய்யும் குரவை ஆடிய அன்று கொடுத்திருக்க முடியாது; ஆனால் அவை கொடுக்கப்பட்டதாக இளங்கோ வடிகளார் கூறியுள்ளார். 'சாலி அரிசி தம்பால் பயன்” (சிலம்பு: 16:21) ஆகவே, பால் தோயாத, நெய் உருகாத நாளாகிய குரவை நிகழ்ந்த அன்று, கோவலன் உணவு உண்டிருக்க இயலாது. அதற்கு முந்திய நாளே உண்டிருக்க வேண்டும் என்பது ம. பொ. சி. அவர்கள் வாதம். . . . . . . . . . . . " - - . . . . .

உணவிற்காம் பொருள்களை, முந்திய நர்ள் இரவே கொடுத்து விட்டார்கள் என்பதற்கு மாறாக, உணவு, ஆக்கிப் படைத்த அன்று கொடுத்தார்கள் என்றும், க்உணவுண்டது விடியற் காலையில் என்பதற்கு மாறாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/30&oldid=560653" இலிருந்து மீள்விக்கப்பட்டது