பக்கம்:சிலம்பொலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 33

திருக்காது. அண்மையிலேயே இருந்திருக்க வேண்டும், அதனால்தான் கோவலன் கொலைச் செய்தி விரைந்து பரவ, குரவை முடிவில் நெடுமால் அடியேத்தத் துறை படியப் போன மாதரி, அச்செய்தி கேட்டு விரைந்தோடி வந்தாள்.

வந்த மாதரி கலக்க மிகுதியாலும்,துணிவு இல்லாமை யாலும், தன்வாய்ப்பட, வெளிப்படையாகச் சொல்ல வில்லை என்றாலும், ஊரார் பேசிக் கொள்வதைக் குறிப் பால் உணர்த்திவிட்டாள். அதனால்தான் கண்ணகிக்கு ஐயமும், அதைத் தொடர்ந்து அந்நண்பகற்போதில் கலக் கமும் பெருக, "ஏதிலார் சொன்னது என்ன?”, “மன்பதை சொன்னது என்ன?', 'எஞ்சலார் சொன்னது என்ன?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்து நின்றாள். இனி யும் மறைத்துப் பயனில்லை என்பதால், மாதரி நிகழ்ந்த தைக் கூறிவிட்டாள். ஆக, குரவை ஆட்டமும், கோவலன் கொலையும் ஒருநாள் நிகழ்ச்சிகளே என்பது இதனாலும் உறுதி செய்யப்படுகிறது. :: . . . . . . .

கோவலன் கொலையுண்ட மறுநாள் மாலையில் தான் கண்ணகி கோவலனைக் கண்டாள் என்று கொண்டு விட்டதனால், "கண்ணகி காணும்போது, இரத்தம் கொப்புளித் திருக்க முடியாது; ஆனால், ஆசிரியர் அவ்வாறு கூறியது, வரலாற்று ஆசிரியர்கள் மனப்போக்கில் அன்று: கற்பனைத் திறம் படைத்த கவிஞனுடைய உளப்போக்கில் ஆகும்’ (பக்கம் : 141) என்க் கூறி, இளங்கோவடிகளின் வரலாற்று அறிவிற்கு மாசு கற்பிக்க முனைந்துள்ளார் ம. பொ. சி, - .

கோவலன் நண்பகற் போதில் கொலையுண்ண, அன்று மாலையே, கண்ணகி அவனைக் கண்டதனால்தான் குருதி கொப்புளிக்கும் நிலையில் காண முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/39&oldid=560662" இலிருந்து மீள்விக்கப்பட்டது