பக்கம்:சிலம்பொலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவியின் ஆடற்கலையில் ஈர்ப்புண்டுதான் கோவலன் மாதவி மனை புகுந்தான் எனக் கோடல் பொருந்துமா?

"அவள் (மாதவி) பாட்டுக்கும் தாளத்துக்கும் ஏற்ப, அவள் வீசிய நெடுங்கண் வீச்சில், அரங்கேற்றுக் காதை யில்,தன் மனத்தைப் பறிகொடுத்தான் அவன் (கோவலன்). கலையே அவளாக விளங்கியபோது, அவளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தான்." -

'மாதவியின் அரங்கேற்றத்தைக் கண்டு கோவலன் மனமருண்டான் என அவர் (இளங்கோவடிகளார்) நேரே கூறவில்லை. ஆனால், அவளது மாலையைக் கோவலன் வாங்கும்போது என்ன கூறுகிறார் ஆசிரியர்? எந்தக் குறிப்பிலே எழுந்ததொரு வியத்தகு கண் வீச்சில் ஈடு பட்டானோ, அந்தக் கண்வீச்சுடையாளது மாலையையே அவன் வாங்குகிறான்’ என்ற குறிப்பே தெளிவாக நம் மனத்தில் எழுமாறு, 'மாமலர் நெடுங்கண் மாதவி மாலை' என்று ஆசிரியர் கூறுகிறார்.'

கோவலன், மாதவி உறவு கொண்ட சூழ்நிலை - குறித்து, திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் (கானல்வரி : பக்கம் : 33).

இதனால் கோவலன்-மாதவிஉறவு கொண்டது, புதிய காம நுகர்ச்சி விருப்பத்தால் ஈர்ப்புண்டு நாளுக்கு ஒரு பரத்தை எனத் தேடி அலையும், அவன் பரத்தன. காரணத்தால் அன்று; கலையின் ஆர்வத்தில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/77&oldid=560700" இலிருந்து மீள்விக்கப்பட்டது