பக்கம்:சிலம்பொலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 83

‘கூடல் மாநகரில் உன்னை விரும்பி விருந்தேற்றுக் கொள்வாரிடத்தை அறிந்து, ஆவன செய்துவிட்டுப் பின்னரே திரும்புவாயாக’ என்று கூறித்தான் கெளந்தி அடிகளாரும் விடைகொடுத்து அனுப்பினார்.

'வருந்தாது ஏ.கி, மன்னவன் கூடல்

பொருந்துழி அறிந்து போது ஈங்கு'

-ஊர் காண் : 60.61

ஆனால், மதுரை சென்று திரும்பிய கோவலன் ஆங்கு, 'மன்னர் பின்னோர்க்கு என் நிலை உணர்த்தி வருவேன்" எனக் கூறிச் சென்றது போலவோ,"பொருந்துழி அறிந்து வா'எனக் கெளந்திஅடிகளார்ஆணையிட்டதுபோலவோ, ஏற்றுச் சென்ற பணிகளை முடித்துத் திரும்பினானா என்றால் இல்லை. சென்றவன் ஆங்கு, 'வையங்காவலர் மகிழ்தருவீதி' (145), "எண்ணெண் கலையோர் இருபெரு விதி (167),"அங்காடி விதி" (179), "பயங்கெழுவீதி'(200), 'நலங்கிளர் வீதி' (204), "அறுவை வீதி’(207),கூலவீதி(211), "நால் வேறுதெருவு’ (212), "ஆவண வீதி’ (213), “மன்ற மும், கவலையும், மறுகும்" (214) ஆகிய இவற்றையெல் லாம் வறிதே பார்த்து வந்தானே ஒழிய ஏற்றுச் சென்ற வினைமுடித்து வந்தானல்லன், இவற்றைக் கண்டு பெற்ற மகிழ்ச்சியில் கடமையை மறந்து விட்டான். இவற்றை யெல்லாம், குறிக்கோள் ஏதும் இல்லாமல், வறிதே வெறித்துப் பார்த்துக் கொண்டே வந்துவிட்டான். அத னால்தான் ஆசிரியர் இளங்கோ அடிகளார் "அங்கெல் லாம் சென்று திரும்பினான்’ என்னாது 'அங்கெல்லாம் திரிந்து திரும்பினான்’ என்று கூறியுள்ளார். “மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து' (214) என்ற வரியினைக் காண்க,

பல்வேறு இடங்களுக்கும், குறிக்கோள் இன்றிச் சென்றலையும் கீழோர் செயல்ைத் திரிதல் என்ற சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/89&oldid=560712" இலிருந்து மீள்விக்கப்பட்டது