பக்கம்:சிலம்பொலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 91:

'பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாடமறுகின் மனைதொறும் மறுகிக், கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அருமறையாட்டியை அணுகக்கூஉய்' (அடைக் கலக்காதை : 60-63) என்ற வரிகளைக் காண்க எனச் சான்று காட்டுவர் அவர்கள்.

3 ஆக, பார்ப்பணி, வடமொழி வாசகம் எழுதிய ஏட்டை வாங்குவாரைத் தேடிப் பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாட மறுகிற்கே சென்றாள் என்பதும், கோவலன் அவளை ஆங்கே கண்டு அணுக அழைத்து அவள் துயர் தீர்த்தான் என்பதும், கோவலன் மாதவி யொடு உறவு கொண்டிருந்த நிலையிலும், தன் மனை வாழ்க்கையை மறந்தவனல்லன்; பீடிகைத் தெருவில் உள்ள தன் மாட மறுகில் வாழ்வதும் மேற் கொண்டிருந்

தான் என்பதை உறுதி செய்கின்றன என்பர். -

4 தம் கூற்றுக்கு அரணாக மற்றுமோர் அகச்சான்றும் காட்டுவர் : கானல் வரிப் பாடல் நிகழ்ந்த அன்று மாலை, கோவலன்பால் சேர்த்து அவனைக் கொணரு

மாறு பணித்து மாதவி கொடுத்த கடிதத்தைக் கொண்டு

சென்ற வசந்தமாலை, அக்கடிதத்தைக் கோவலனிடம் கொடுத்த இடம் கூல மறுகு ஆேகும். "மாலை வாங்கிய வேலரி நெடுங்கண், கூல மறுகில் கோவலற்கு அளிப்ப’ (வேனிற்காதை : 72-73) என்று கூறுகிறார் இளங்கோவடி களார். கூலமறுகாவது பல்வேறு வகைப் பொருள்கள் விற்கும் பெருங்கடை வீதியாகும். பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூலவீதி' (இந்திர விழஆரெடுத்தகாதை 22-23), "கூலம் குவித்த கூலவீதி' 1ஊர்காண் : 2111 என்ற வரிகளைக் காண்க.

5 ஆக, மாதவியைக் கடற்கரைக்கண் விட்டுப் பிரிந்த கோவலனும், ஆங்கிருந்து தேரே கடைவீதிக்குத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/97&oldid=560720" இலிருந்து மீள்விக்கப்பட்டது