பக்கம்:சீவகன் கதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

[அம்பு மூலம் செய்தி அனுப்பினான். அது சென்று சீவ கன் தேர்த்தட்டில் மாறி வீழ்ந்தது. கண்ட சீவகன் அவ்வாறு அம்பு செலுத்த வல்லவன் தன் தோழன் பதுமுகனே என்பதறிந்தான்; போர் நிலை மறந்தான்; அம்பில் எழுதியிருந்ததையும் நோக்கினான்;

'குடைநிழற் கொற்ற வேந்தன் ஒருமகற் காணக் குன்றா
 அடிநிழல் உறைய வந்தேம் அடியம்யாம்.'

(1863)

  என்ற அடி கண்டு திடுக்கிட்டான்; தன்னை அரசகுமரன் என அவர்கள் எவ்வாறு அறிந்தார்கள் என எண்ணி னான். போர் நின்றது. அனைவரையும் 'வருக!' என்றான். ஒருவரை ஒருவர் தழுவி மகிழ்ந்தனர். பின்பு அனைவரை யும் யானைமேலேற்றிக்கொண்டு அரசமாளிகைக்கு அழைத்துச் சென்றான் சீவகன். அந்நகரத்தரசன், வந்த வர் தன் மருமகன் தோழர் என்பதையறிந்து பெருஞ் சிறப்புச் செய்தான். சீவகன் தன் மனைவியையும் மற்ற வரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்வித்தான்.         
 ஒருகால் சீவகன் தனிமையில் இருந்த போது புத்தி சேனன் தத்தை தன்னிடம் ஓவியக் கிழியாகக் கொடுத்த ஓலையை நீட்டினான், அதில் அவள் பண்டை மண நிகழ் வும், பின்பு பிரிந்த நிலையும் கூறி, இனியும் பிரிந்திருத் தலும், நாட்டை அந்நியன் வசம் விட்டிருத்தலும் தகுதி யன்றென்று காட்டி, தன் தங்கை குணமாலை வருந்தும் வருத்தமெல்லாம் எழுதி, தன்னுள்ளே அவன் நீங்காது தங்கினமையின் தான் ஆற்றியிருக்கும் நிலையினையும் விளக்கியிருந்தாள். அவள் வரைந்ததாகத் தேவர் கூறும் ஒவ்வொரு பாடலும் இனிமையும் உணர்வும் தருவதாய் உள்ளது. சீவகனை உள்ளத்தே கொண்டமை யின் தான் ஆற்றியிருந்ததாகக் கூறும் செய்யுளைக் காண்போம்:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/106&oldid=1484402" இலிருந்து மீள்விக்கப்பட்டது