பக்கம்:சீவகன் கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



உண்மை வெளிப்படுதல்113

பணிப் பெண்களை நோக்கி விரைவில் உணவு கொண்டு வரக் கட்டளையிட்டாள். மகளிர் உணவு கொண்டு வந்து இட்டனர். கிழவனாகிய சீவகனும் அவ்வுணவு மிக்க இனிமை உடையதென்று கூறிக்கொண்டே உண்டான்; பின்பு கை கழுவி, வாய் பூசி, மகளிர் கொடுத்த அடை காயையும் வாயிலடக்கிக்கொண்டான்.

இங்குத் தேவர் தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருள் இருப்பதை எண்ணிப் பார்க்கின்றார். மகளிர் இனிமை நலம் பெற்றவர். 'இனிமை தழுவியை தயலார்' என்று கூற விரும்புகின் தேவர், 'தமிழ் தழீஇய சாயலவர்' என்றே கூறுகின்றார். அதற்கு உரை எழுத வந்த ஆசிரியர் நச்சினார்க் கினியரும், 'இனிமை தழுவிய சாயலை உடையவர்' என்று பொருள் கூறிச் சென்றார். தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்னும் பொருளுள்ளதைத் தேவர் வாக்கு வெளிப்படுத்துகிறதன்றோ!

அனைவரும் உணவுண்ட பின் சுரமஞ்சரி அக் கிழவனை அடுத்துப் பலப்பல பேசிக்கொண்டிருந்தாள் அவன் தான் க Այ கருமம் நிறைவேறும் வரையில் மறைந்த வடிவு கொண்டு, வந்த கருத்தினை இரு பொருள்படச் சமத்காரமாகக் கூறி வந்தான். 'மறை வல்லன்' என்பதை 'வேதம் வல்லவன்' என்றும், 'நினைத்தது முடிகாறும் என்பதைக் ‘க ரு தத்துவம் முற்ற முடியுமளவு' என்றும், 'காலம் சிந்தையிலன்' என்பதை 'வாக்குவாதம் வளர்க்க விரும்பாததை நினைந்திருந்திலன்' என்றும் கருதி, அவள் அவன் சிறந்த மறை உணர்ந்த அந்தணன் என்ற முடிவுக்கு வந்தாள். மிகச் சிறந்தவன் என்று கருதிய அளவிலே அவனிடம் ஆன்ற மதிப்பும் அரும்பியது. இரு பொருள்படத் தேவர் பாடியதை ஈண்டுக்கூறல் பொருந்துவதாகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/114&oldid=1484047" இலிருந்து மீள்விக்கப்பட்டது