பக்கம்:சீவகன் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழுது, எ லவோ! பிறப்பும் வளர்ச்சியும் 11 நீர் மையாக நடைபெறுகிறது. உழவர் நிலத்தைச் சிறக்க -ருவிட்டு, விதையைத் தூவினர். முளைகள் கிளம்பின. பிறகு நாற்றைப் பறித்து நல்ல முறையில் நட்டனர் உழவர் குலப் பெண்டிர்.அந்நாட்டு வளத்தை விளக்குவன போல, இட்ட பயிரோடு தாமரையும், குவளையும், பிற மலர்ச் செடிகளும் பயிராயினவாம். வளத்தை விளக்க அவை நெற்பயிர்களோடு போட்டி யிட்டு மேலே கிளம்பின. அவை பயிருக்குக் களைகளல் அவற்றை நீக்கினாலன்றிப் பயிர் நன்றாக வளராது என்ற எண்ணத்தோடு உழவர் வயலில் இறங்கினர். அங்குள்ள தாமரையும் குவளையும் களைவது தான் அவர்கள் வேலை. ஆனால், அவர்கள் அவ்வேலை யைச் செய்யவில்லை ; பாட்டுப்பாடிக்கொண்டிருந்து கரை யேறிவிட்டார்கள். காரணம் என்ன? இதுதான்: தேவர் பின்பு காவியத்தில் தாம் காட்ட இருந்த காதற்சுவையை இங்கேயே உணர்த்தத் தொடங்கிவிட்டார். குவளை மலர் உழவர்களுக்குத் தங்கள் காதலியரின் கண்களாகவும், தாமரைகள் முகங்களாகவும் காட்சி அளிக்கின்றன. உற்ற காதலியின் முகத்தையும் கண்ணையும் பறிக்க எந்தத் தலைவன் தான் ஒருப்படுவான்! களை பறிக்க வயலுள் புகுந்த அந்த ஏமாங்கத நாட்டு மக்கள், செய்வதறியாது, சிந்தை தடுமாறினார்கள். அவர்கள் வாய் மட்டும் எதையோ பாடிற்று. அவர்கள் கரையேறி வீடு சென் றார்கள். இக்கருத்தைத் தேவர் வாக்கிலேயே காணலாம் கண்எனக் குவளையுங் கட்டல் ஓம்பினர் ; வண்ணவாண் முகமென மரையின் உட்புகார்; பண்எழுத் தியல்படப் பரப்பி இட்டனர் ; தண்வயல் உழவர்தம் தன்மை இன்னதே.' என்பது சிந்தாமணி. (51) வயலில் பயிர் வளர்ந்தது; வளர வளர அதன் அழகு சிறந்தது. கதிர் விடும் பருவம் வந்தது. பயிரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/12&oldid=1484476" இலிருந்து மீள்விக்கப்பட்டது