பக்கம்:சீவகன் கதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 தருவதாகவும் குறித்திருந்தான். இவையெல்லாம் தேவர் அழகுபடக் கூறுவது நோக்கத்தக்கது.

'தனக்குயான் உயிரும் ஈவேன்; தான்வரப் பழியும் நீங்கும்;
எனக்குஇனி இறைவன் தானே; இருநிலக் கிழமை வேண்டி
நினைத்துத்தான் நெடிதல் செல்லாது என்சொலே தெளிந்து நொய்தாச்
சினக்களி யானை மன்னன் வருகெனச் செப்பி னுனே.' (2147)

என்று அவன் எழுத்தாகத் தேவர் எடுத்துக் காட்டு கின்றார்.

கடிதத்தை வாசிக்கக் கேட்டறிந்த மாமனும் மருமக னும் நகைத்தனர்; 'இயமனைத் தானே வலிய அழைக் கின்றான் போலும்!' என்றனர்; அவன் கூப்பிடும் வழியே ஏமாங்கத நாடு சென்று, அவனை வஞ்சனையால் கொல்ல முடிவும் செய் தனர். ஆம்! வஞ்சனையால் கொல்லல் தவறல்லவே! அரச நீதியும் அதுதானே? உடனே கோவிந்தராசன் முரசறைவோனைக் கூவி, தானும் கட்டியங்காரனும் நட்பாயினமையை நாட்டுக்கு முரசறையச் சொல்லி, தான் இராசமாபுரம் செல்ல இருப்பதையும் விளக்கச் சொன்னான். இச்செயல் கண்டு, அந்நாட்டில் உள்ள கட்டியங்காரன் ஒற்றர் அதை உடனே அவருக்கு அறிவிப்பர். அவனும், 'வலிய வந்து வீழ்கின்றான்!' எனச் சிந்தை மகிழ்ந்திருப்பான். ஆனால், நடக்க இருப்பது வேறன்றோ!

தலை நகர் நோக்கிய தானை:

தலை நகர் நோக்கிச் சென்று சீவகனை அறிமுகப் படுத்திக் கட்டியங்காரனைக்கொன்று நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்ப த கோவிந்தராசன் விருப்பம். சீவகனும் அதற்கெனவே காலமும் இடனும் நோக்கி அது வரை அமைந்திருந்தான். காலம் வந்தது. எனவே, சீவகனது சேனையும், கோவிந்தராசனது சேனையும் திரண்டன. சேனையின் திரட்சியையும், செறிவையும், செலவையும் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/122&oldid=1484542" இலிருந்து மீள்விக்கப்பட்டது