பக்கம்:சீவகன் கதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறமும் துறவும்

143

என்ற இரண்டும் அடங்கும். இரண்டாம் பாடல் 'நெல் லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,' என்ற சங்கச் செய்யுளை நமக்கு நினைவூட்டுவதாக அமைகின்றதன்றோ! இவ்வாறு பல வாறாய் அரச நெறிகளையும் அறவழிகளையும் தன் மகன் சச்சந்தனுக்கு அறிவுறுத்தி, அவனை அரசனாகுமாறு பணித்தான் சீவகன்; குணமாலை பெற்றெடுத்தமைந்தனை இளவரசாக்கினான்; பிற மைந்தர்களுக்கும் வீரர்களுக்கும் தேரும், யானையும், செல்வமும், நாடுகளும் கொடுத்தான்; தன் தோழர் மக்களாகிய வீரர்களைச் சச்சந்தனுக்குத் துணைவர்களாக்கினான்; அனைத்து ஏற்பாடுகளும் செய்து, தான் துறக்க விரும்பியதை அரசியர்க்கு உணர்த்த அந்தப்புரம் சென்றான்.

அற நெறி :

  அந்தப்புரம் சென்று தோழியர் மூலம் தேவிமாரைத் தன் அருகழைத்தான் சீவகன். அனைவரும் வந்து ஆத னங்களில் அமர்ந்தனர். சீவகன் தானும் ஓர் ஆதனத் தமர்ந்து, தன் உள்ளக்கிடக்கையைக் கூறத்தொடங்கி னான் ; கொடை நிலையும், பகுத்துண்ணும் பண்பு நெறியும், தெய்வங்களுக்குப் பலியிட்டுப்பரவும் முறையும், அற்ற வர்க்கு உதவும் நெறியும் வீட்டின்பத்திற்கு வழியென்று கூறினான்; மேலும், பிறவிதோறும் பற்றி வருகின்ற நலக்கேடுகளையும் விளக்கினான்; சீலம் தாங்கி வாழும் செம்மை நெறியையும் உணர்த்தினான்; பிறக்கும் உட பின் நிலையையும், அதன் நிலையாமையையும் விளக்கினான்; அனைத்தையும் விளக்கிக் கூறி, இறுதியில் தான் துறக்க விரும்பியதையும் கூறினான்.
  தம் தலைவன் துறக்க நினைத்தமை கேட்ட மகளிர் அனைவரும் வருத்தமுற்றனர். அவர்தம் வருத்த நிலை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/144&oldid=1484594" இலிருந்து மீள்விக்கப்பட்டது