பக்கம்:சீவகன் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும் 25 25 கியங்களிலெல்லாம் வான் வழிச் சென்ற வரலாறு கூறப் படுகிறது. ஆனால், அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் - எல்லோர்க்கும் பயன்படும் முறையில்- அவ் வளவு எளிமையில் கிடைக்கக்கூடியதாக அன்று அது இல்லை. எனினும், அரசனான சச்சந்தனுக்கு அப்பொறி யினைச் செய்வித்தல் எளிதாயிற்று. அப்பொறியினை மயில் வடிவத்தோடு செய்வித்து முடித்தான். அவ் வூர்தி மிக அழகாக அமைக்கப்பட்டது. அரசனே அனைத்து நூலினும் வல்லவனாய் விளங்கிய காரணத்தாலேதான் அருகிருந்து தச்சரைக்கொண்டு அவ்வூர்தியைச் செய் வித்து முடித்தான். அத்தொழிலில் தேர்ச்சி பெற்ற தச்சன் அம்மயிற்பொறியை முடித்து, முடிவில் உண்மை மயிலுக்கும் அதற்கும் வேறுபாடு தோன்றா வகையில் செம்மையாக்கி அரசனிடம் சேர்ப்பித்தான். பீலிநன் மாமயி லும்பிறி தாக்கிய கோலநன் மாமயி லும்கொடு சென்றவன் ஞாலமெ லாம்உடை யான்அடி கைதொழுது ஆலும்இம் மஞ்ஞை அறிந்தருள் என்றான்.' (236) என்பது தேவர் வாக்கு. கட்டியங்காரன் சூழ்ச்சி : சச்சந்தன் இந்த முறையில் தன் மாளிகையில் மயிற் பொறியை முடிக்கும் அதே வேளையில் கட்டியங்காரனும் தான் கருதியது முடிக்கும் தொழிலில் ஈடுபட்டான்; தனக்குரிய அமைச்சர்களை அருகு சேர்த்தான்; ஆராய்ந் தான்; தெய்வம் வலிய வந்து தனக்கு அந்த அரச பதவியைத் தந்தது என வியந்தான்; விளக்கினான்; மன்னவனுக்குப் பகையான ஒரு தெய்வம் தன்னிடம் வந்து ஓயாது சச்சந்தனைக் கொல்லத் தூண்டுகிறது என்ற ஒரு பொய்யையும் கூறி வைத்தான். ஆம்! சச்சந்தன் உயிருக்குயிராயிருந்த இருவரும் ஒருவரே - என்று உலகத்தோர் முன்னாள் போற்றிய- அதே கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/26&oldid=1484667" இலிருந்து மீள்விக்கப்பட்டது