பக்கம்:சீவகன் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிறப்பும் வளர்ச்சியும்

நேரில் கண்டதாலும், அவனது வாள் வீச்சுக்கு ஆற்றா மையாலும் அஞ்சி ஒதுங்கினார்கள். எனவே, கட்டியங்கா ரன் தானே முன்னின்று சச்சந்தனைக் கொல்லத் துணிந்தான்.

எத்துனையோ வீரத்தோடு போரிட்ட சச்சந்தன் என்னும் பெருமன்னன், முடிவில் கட்டியங்காரனது வாளுக்கு இலக்காகி மாண்டான். அவன் இறந்ததால் ஏமாங்கத நாட்டுச் சான்றோர் மயங்கினர்; கற்புடைய ளிர் இரங்கினர்; கொடுங்கோலாகிய இருள் பரவிற்று; இன்னொலி மழுங்கிற்று; மகளிர் அலக்கணுற்று வருந் தினர்; மற்றவர் கதறினர். எனினும், கட்டியங்காரன் ஒன்றையும் பொருட்படுத்தானாய், நரி சிங்கத்தைக் கொன்று அதன் இடத்தை அடைந்து நிமிர்ந்து நிற் பதை ஒத்து, நாடு முழுவதுக்கும் இனித் தானே தலைவன் எனப் பறைசாற்றி, அரசியலைக் கைக்கொண்டான். நகர மாந்தரும் பிறரும் அவனது கொடுங்கோன்மைக் கஞ்சி, மறைந்த மன்னவனைப் பற்றி ஒன்றும் பேசா து ராய் அமைந்தனர். இருள் மனத்தனாகிய கட்டியங்காரன் ஏமாங்கத நாட்டு மன்னனானான்.

ஊமைய

      மயிற்பொறியில் பறந்த விசயை, தன் வினையை நினைத்துப் புலம்பிக்கொண்டே சென்றாள். அரசன் முன்னரே அவளுக்கு அப்பொறியைச் செலுத்தும் வழிகளையெல்லாம் நன்கு கற்பித்திருந்தான்.எனவே, அவள் அந்தப் பொறியை நன்கு செலுத்திக் கொண்டே சென்றாள். மயிற்பொறியும் வானிடைப் பறந்து இராசமாபுரத்து அகநகரையெல்லாம் தாண்டிப் புறநகரின் எல்லையில் வந்துற்றது. புறநகரின் கோடியில் அமைந்துள்ளது, அந்நகரத்துச் சுடுகாடு. அச்சுடுகாட்டு எல்லையில் மயிற்பொறி செல்லத் தொடங்கியது. அதே வேளையில் அங்கு அகநகரிலே கட்டியங்காரன் சச்சந் தனைக் கொன்று தான் அரசனானமை குறித்து முரசு முழங்கினான். அம்முழக்கம் அனைவர் காதிலும் பட்டது;
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/30&oldid=1484555" இலிருந்து மீள்விக்கப்பட்டது