பக்கம்:சீவகன் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீவகன் கதை

வேண்டு என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். விரைவில் நக ரத்துப் பசுக்கள் வரும் என்ற குறி அவர்களுக்குத் தோன்றிற்று. எனவே, வந்ததும் அவற்றை விரைந்து கைப்பற்றிக்கொண்டு காட்டுக்குள். செல்ல மெனத் திட்டமிட்டனர். அவர்களுள் நல்ல சோதிடக் குறிப்பறிந்த முதுமகன் ஒருவன், மேல் நடக்க இருப்பதை உணர்ந்து கூறினான். பசுக்கள் விரைவில் அவர்கள் இருக்கும் பக்கத்தில் வருமெனவும், அவற்றை அவர்கள் கைக்கொள்வார்கள் எனவும், அதை அறிந்து அரசன் சேனைகளை அனுப்பி மீட்க முயல்வான் எனவும், அச் சேனைகள் வேடர்முன் ஆற்றாது தோற்றோடும் எனவும், இறுதியில் ஒரு வீரன் தனியாகத் தேர்மீது வந்து வேட ரைத் தோற்கடித்துப் பசுக்கூட்டங்களை மீட்டுச் செல் வான் எனவும் கூறினான். அது கேட்ட அனைவரும் நகைத்து, 'அரசர் சேனையையே தோற்கடிக்கும் நாங்கள் ஒற்றைத் தேரைத் தோற்றோடச் செய்ய மாட்டோமா? என இகழ்ந்து, மேல் நிரையைக் கொள்ள ஏற்பாடு செய் தனர். அந்த ஏற்பாட்டின்படி அவர்கள் நிறையக் கள் குடித்து, பறையார்த்து, கடவுளை வணங்கி, 'வெல்க!' என வாழ்த்திக் காலம் பார்த்திருந்தனர்.

நிரை மீட்க முயற்சி :

இராசமாபுரத்தே பசுக் கூட்டங்களுக்கெல்லாம் பெருந்தலைவன் நந்தகோன் என்பான். ஆயர் குலத் தலைவன் அவன். அவனுடையவும் அவனைச் சேர்ந் தோருடையவுமான பெரும்பசுக்கூட்டங்களையே அன்று வேடர் கைக்கொண்டு செல்லக் காத்திருந்தனர். பசுக் கூட்டங்கள் வந்தன; வேடர்கள் முன் ஏற்பாட்டின்படி சுற்றி வளைத்து அம்பு சொரிந்தார்கள். அவர் நிலையைப்

'பாய மாரிபோல் பகழி சிந்தினர்

ஆயர் மத்தெறி தயிரின் ஆயினார்.'

(421)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/43&oldid=1484525" இலிருந்து மீள்விக்கப்பட்டது