பக்கம்:சீவகன் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசமாபுரத்தே 61 கனுக்கு எதிராகச் சினம் கொள்ளச் செய்தான்; அவர் களைத் தூண்டும் வகையில் பேசினான். "" அரசன் மகளாகிய காந்தருவதத்தையை வணி கன் மகனாகிய சீவகன் கொண்டு செல்லப் பார்த்திருக் கிறீர்கள்! அவன் முன் ஒளியற்றீர்கள்! வாட்போருக்கு அஞ்சினீர்கள்! நீங்கள் அரசை விட்டுக் காட்டுக்குப் போங்கள்! இன்று இவ்வழக்குத்திரு அவனைச் சென்ற டைந்தமை போன்றே நாளை உங்கள் நிலமகளும் அவனைச் சென்றடைவாள். ஆகவே, நீங்கள் அமைந்திருத்தல் ஆகாது. உண்மையிலேயே உங்களுள் யாராவது அச் செல்வியை அடைய விரும்பின், தனித்தனியாக நின்று சீவகனைப் போரில் வெல்லுங்கள்; வென்றவர் அவளைப் பெறுவர்," என்று சினந்து கூறினான் கட்டியங்காரன். த கட்டியங்காரன் கூறியதைக் கேட்ட மன்னர், அழகு மகள் மேல் கொண்ட ஆசையால், அவ்வாறு போர் தொடுக்க ஆயத்தமாயினர். அதே சமயத்தில் அங்குச் சீவகனோடு வந்திருந்த பதுமுகன் அச்செயல் கண்டு சிந் தித்தான்; நகைத்தான்; மன்னர் கூட்டத்தை நோக்கி வாய் திறந்து பேசலானான்: அரசர்காள், உங்கள் செயல் வினோதமானது! காமத்தால் கண் கலக்கப்பட்டீர்கள் போலும்! இசையா லன்றி யானைப்போரால் இவனை வெல்லக் கருதுகின்ற உங்கள் செயல் சிறந்ததோ? வழிவழி உங்கள் குலத்துக் குப் பழியன்றோ? அன்பு கலந்த உள்ளத்தாலன்றி ஆணை வழி வரும் வாட்போரினால் அவளைக் கொள்ள முடியுமோ? இந்தப் போர் அவளைப் பெறுதற்குப் பதில் நீங்கள் பெற் றுள்ள நிலமகளையும் இழக்க வழி காட்டுவதாகும். வெற்றி மிக்க சீவகனை அவள் மணந்தமை கண்டு மகிழ்ந்தோ, அன்றி 'நமக்குக் கிடைக்கவில்லையே!' என்று வருந்தியோ செல்வதன்றி, இப்போர் உங்கட்கு ஏற்றதோ? சிங்கம் தன் றுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/62&oldid=1483803" இலிருந்து மீள்விக்கப்பட்டது