பக்கம்:சீவகன் கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாபுரத்தே

67


சுரமஞ்சரியின் சீற்றம்:

தன் சுண்ணம் தாழ்த்தப்பட்டதை அறிந்த சுரமஞ் சரி வருத்தமுற்றாள். குணமாலை அவளைத் தேற்றி, 'பண்டு போல விளையாட வா,' என்றழைத்தும், அவள் திரும்பவில்லை; நேராக வீடு சென்று அன்னை தந்தையர் முன்பு விம்மி அழுதாள். வசந்த விழாவுக்குச் சென்ற சுரமஞ்சரியின் வாட்டங்கண்டு பெற்றோர் வருந்தினர். அருகிருந்த சுமதி என்னும் தோழி, நிகழ்ந்ததை அவள் தந்தையாகிய குபேரதத்தனுக்குக் கூறினாள். யார் தேற்றியும் தேறாத சுரமஞ்சரி, தான் தனியாகக் கன்னி மாடத்து ஆடவரைக் காணா வகையில் இருக்கப் போவ தாகக் கூறினாள். அவள் விருப்பப்படி தந்தையும் அரச னுக்கு அறிவித்து ஆடவர் ஒருவரும் அருகு செல்லா வகையில் கன்னி மாடம் ஒன்று அமைத்தான். சுரமஞ்சரி யும் அக்கன்னி மாடத்தில், ஆடவர் எவரையும் நோக் காது, சீவகனையே மணக்க வேண்டுமென நோற் றிருந்தாள்.

குணமாலையின் செயல் :

சுரமஞ்சரி கன்னி மாடம் சேர்ந்ததை அறிந்த குணமாலை கவன்றாள்; 'விளையாட்டு வினையாயிற்றே!' என எண்ணி வ ந்தினாள்; தன்னால் வந்த துயர் நீக்கக் கரு திப் பிண்டி நீழல் வணங்கினாள். அப்பெருமான் கோயிலில் அடியவர் பலர் தத்தம் பிரார்த்தனைகளைச் செய்துகொண்டிருந்தனர்.

நந்தபெருமானை

ஒரு புறம் வசந்தகால மாலைக்கேற்ற புனலாட்டினை ஒரு சிலர் மேற்கொண்டு மகிழ்ந்தனர். இப்புனல் விளை யாட்டுச் சிறப்பைப் பலபடப் பாராட்டுகின்றார் தேவர். இவர்தம் இந்தப் பாடல்கள் பிற்காலக் கவிஞர்களாகிய கம்பர் போல்வார்க்கு நல்விருந்தாயமைந்ததன்றிப் பின் புற்றுதற்கும் உரியனவாய் அமைந்தன என்று கூறுவர் அறிந்தோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/68&oldid=1531242" இலிருந்து மீள்விக்கப்பட்டது