பக்கம்:சீவகன் கதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



                  கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும்
                                                                97

லையும் ஆண்மையையும் போர் முறைகளையும் கண்டான்; கண்டு உளம் கனிந்தான்; அனைத்தையும் ஆக்கிய சீவகனை நோக்கினான். அவன் தன் குலத்துக்களித்த பெருஞ்சிறப்புக்குச் செய்யக்கூடிய கைம்மாறும் உண்டோ என்று கூறி,

           கண்முழு துடம்பிற் பெற்றேன்
               காளைகைம் மாறு காணேன்
           பண்முழு துடற்றும் தீஞ்சொல்
               பாவைநின் பாலள் என்றான்.'
                                                          (1684)

ஆம். அவன் கைம்மாறாகத் தன் மகள் கனகமாலை யைச் சீவகனுக்குக் கொடுத்தான். தன் உள்ளத்தெண் ணம் முடிந்ததை அறிந்த சீவகன் ஒன்றும் கூறாதிருக்க, மன்னனோ,மகள் பிறந்த அந்தப் பொழுதிலேயே சாதகன் குறித்த குறிப்படியேதான் அந்தமணம் நடைபெறுகிறது என்று கூறி, மணநாளும் குறித்தான். குறித்த நாளில் மணமும் நடைபெற்றது. காளையாம் சீவகனும் கன்னி யாம் கனகமாலையும் தத்தம் கருத்து நிறைவேறியது அறிந்து, ஒருவரை ஒருவர் நீங்காராய் உறைவாராயினர்.

தம்பி நந்தட்டன் வருதல்: சீவகன் காதல் வாழ்வில் திளைத்து வெளிப்படும் காலம் பார்த்து ஏமமாபுரத்து இருக்கின்ற அந்தக் காலத்து, ஏமாங்கத நாட்டுத் தலைநகரிலே அவன் சுற்ற மும் தோழரும் அவன் நிலை அறியாது திகைத்தனர். சிலர் கட்டியங்காரன் நினைத்ததுபோன்று அவன் இறந் தான் என்ற முடிவிலே இருந்தனர். ஒரு சிலர், 'எங்கோ மறைந்து வாழக்கூடும்!' என எண்ணினர். தம்பியாகிய நந்தாட்டனோ, சீவகன் எங்குள்ளான் என்று பற்பல இடங் களிலும் முயன்று தேடினான்; தேடியும் கண்டிலன்; செய்வ தறியாது சிந்தை தளர்ந்தான். 'எதற்கும் விஞ்சையர் நாட்டு வனிதை காந்தருவதத்தையைக் கேட்டால், ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/98&oldid=1483914" இலிருந்து மீள்விக்கப்பட்டது