பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள் 4


      முன்பனிக் காலம் முடிந்த பின்னர்ப்
      பின்பனிக் காலம் உடனே பிறக்கும். 
      இன்னல் விளைக்கும் இக்காலந் தன்னில்
      உத்தர வின்றி உலவைக்காற் றடிக்கும்.


      முற்றிய வெப்பமே முதுவேனிற் பருவமம். 
      கோடை வந்ததும் கோடைக்காற் றடிக்கும்.
      ஏமாற்றும் கானல்நீர் எங்கும் தோன்றும். 
      வலியனும், காடையும், வானம் பாடியும், 
      மகிழ்ச்சி கொள்ளும், மல்லி மலரும். 
      மாதிரி காட்டிப் பாதிரி பூக்கும்.
      அந்தக் காலமோ செந்தமிழ் இலக்கிய 
      கல்வியில் ஆழம் பார்த்திட்ட காலம். 
      இந்தக் காலமோ இறுகத் தழுவிக் 
      கலவியின் ஆழம் பார்க்கின்ற காலம்.
      பனித்தல் என்றால் நடுங்க வைப்பதாம் 
      நமையெல்லாம் பனித்துளி நடுங்க வைப்பதால் 
      பயத்தினால் நாமதைப் பணித்துளி என்கிறோம். 
      அண்ணனைப் போன்று முன்னே பிறந்
      நமையெலாம் நாள்தொறும் நடுங்க வைத்திட 
      முத்தும் பருவமே முன்பணிக் காலம்.