பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

131

கிடக்கின்றார்கள் தாம் அடிமையான பிறகு என்னை அடிமையாக்குவதற்கு யுதிஷ்டிரருக்கு உரிமை ஏது? என்று கதறுகிறாள் திரெளபதி அவள் வினாவுக்கத் தக்க விடையளிக்க எவரும் முன் வரவில்லை துரியோதனன் தம்பி விகர்ணன் மட்டும் எழுந்து நீதி மொழி கூறுகிறான் அவ்வேழையின் சொல் அம்பலம் ஏறிற்றில்லை அரிநாமங்களே திரெளபதிக்குத் துணை புரிந்து, அவள் மானத்தைக் காப்பாற்றுகின்றன. அதைப் பெரியோர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் ‘வாச்சியப் பிரபாவம் போல், அன்று வாசகப் பிரபாவம் அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்றுதவும் திரெளபதிக்குப் புடவை சுரந்தது திருநாமமிறே’

இத்தகைய கொடுமையை இயற்றியவர்கள், ஆமோதித்தவர்கள், அதைப் பார்த்துக்கொண்டு வாளா இருந்தவர்கள், யாவரும் படுவதற்கு யுத்த நீதி முறையைக் கையாளவும் வேண்டுமா என்பதுதான் எல்லோர் மனத்திலும் உதிக்கக் கூடியது எல்லா விதிகளுக்கும் விலக்குண்டு அறம் மறமாகவும், மறம் அறமாகவும் திகழ்வது சந்தர்ப்பத்தைப் பொறுத்தேயாம்

இராமாயணக் கதையைச் சிறப்பிக்கின்றவையான சகோதர நட்பு, தோழமை, பெண்களுயர்வு, அரசநீதி, அந்தணர் பெருமை, தாய் தந்தையர் பாராட்டு முதலியன முக்கியக்கதையின் அங்கமாகவும், உபாக்கியானங்கள் உபதேசங்கள் இவற்றின் வாயிலாகவும் பாரதத்தில் இடம் பெறுகின்றன ஆனால், பாரதத்திலுள்ள விரிவும் விளக்கமும் பேச்சிலுள்ள சுதந்திரமும், நடையிலுள்ள வீரமும் உறுதிப்பாடும் வாசகப் போக்கின் தாராளமும் இராமாயணத்தில் இல்லையென்றே கூறலாம் உதாரண மாக, திரெளபதியை வைத்துச் சூதாடித் தோற்றபோது பீமன் யுதிஷ்டிரரைப் பார்த்து, மனையாளை விலை மகள் எனக் கருதிப் பணயமாக்குவதை உம் ஒருவரிடமே காண்கிறேன் சகாதேவா, கொண்டுவா நெருப்பை, இவர் கவறாடிய கைகளைக் கொளுக்திவிடுகிறேன்’ என்று