பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

செந்தமிழ் பெட்டகம்


இனி, இரண்டாவது சொல்லதிகார முரண்பாடு களையும் பார்க்கிறோம்

1'முன்னிலை தன்மை ஆயீரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி (சூத் 226)

இது தொல்காப்பியரின் தெள்ளிய கூற்று இதற்கு நேர்மாறாகச் சங்க இலக்கியங்களில் முன்னிலை-தன்மை இரண்டிலும் வியங்கோள் பயிலுவன

2. முன்னிலையில் வியங்கேள் : அ (புறம்6) - குடுமி மன்னிய பெருமநீ நிலமிசையானே ஆ (புறம் 9) எங்கோவாழிய, குடுமி நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே இ (நற்34) ‘கடவுறாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே' ஈ (அகம்46) 'வண்டுது பனிமலர் ஆரும ஊர, யாரையோ நிற்புலக்கேம், வாழியர் எந்தை' உ நற்றிணை 16-32-86-212 அகம் 54-59-85 பாக்களையும் பார்க்க

தன்மையில் வியங்கோள்: (புறம் 71) அ “அவர்ப்புறம் காணேன் ஆயின், சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக 'மெலிகோல் செய்தேன் ஆகுக’ இவற்றுள் 9 ஆம் புறப்பாட்டுப் பஃறுளிப் பாண்டி நாட்டைக் கடல் கொள்ளுமுன் பாடிய 27 நூற்றாண்டுகளுக்கு முந்தியபழம்பாட்டாதல் வெளிப்படை இவை போல்வன பல தொல்காப்பியர் சொல்லதிகார விதிகளொடு முரணும் வழக்குகள் இனிக் கடைசியாகத் தமிழிற் சிறந்த பொருள திகார விதி வீழ்ச்சி வழக்குக்குகளையும் சந்திப்போம்

1 அகத்திணைப்பாக்கள், கலியே, பரிபாட்டு-ஆயிரு பாவினும், உரியதாகும் என்மனார் புலவர் (அகத்திணை சூத்.53)

2 புறநிலை வாழ்த்தே, கலிநிலை வகையும், வஞ்சியும் பெறா (செய்யுளியல் சூத்10)

3 ‘வாயுறை வாழ்த்தே, அவையடக்கியலே செவியறிவுறு என அவையும் அன்ன' (செய்குத்11)