பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

177

வெறுப்பு, மகிழ்ச்சியெல்லாம் தோன்றி மறைகின்றன இந்த வினாவின் விடையை விரைவில் கண்டுபிடிப்பதில் நான் முனைந்து நிற்பதோடு, இயற்றி நிலையும் இருந்து கொண்டே இருக்கின்றது அல்லது, நீங்கள் மிகுந்த கோபம் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் இது வெறும் உணர்ச்சிமட்டுமே என்று தோன்றலாம் ஆனால், நீங்கள் யார்மேல் அல்லது எதன்மேல் கோபம் கொண்டிருக் கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள் இந்தக் கோபத்தை வெளியில் காண்பிக்க முயலுகிறீர்கள் இதில் அறிவு, உணர்ச்சி, இயற்றி நிலை மூன்றும் இருக்கின்றன.

இவ்விதமே இம்மூன்று நிலைகளும் ஒருமித்துக் காணப்படுகின்றன. நனவுநிலை இம் மூன்று தன்மைகளை உடையதுசெ பெ- 12