பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

199

அன்புள்ளத்தை அறிந்தவளாகையால் போரில் புண்படுவார் புண்ணையெல்லாம் தனதாகக் கொண்டு வருந்தித் தூங்காது கிடப்பான் என அவனோடு அஞ்சி, அன்பால், அருளால் நடுங்குகின்றனள் அரசி அசோக னது அருள் உபதேசத்தை நமக்கு நினைப்பூட்டுவதோடு ஈருடலும் ஓருயிருமாய் இருக்கின்ற அகவாழ்வின் நுட்பத்தையும் காட்டி நிற்கின்றாள் இந்தத் தலைவி இன்பத்தில் முடிகின்றது இந்தப் பாடல்

அடுத்து வரும் அகப்பொருட் பாட்டு ஏழாம் பாட்டாம் நெடுநல்வாடை என்பதாகும் இது 188 அடிகளால் அமைந்த ஆசிரியப்பா திருமுருகாற்றுப் படை பாடிய நக்கீரனாரே இதனையும் பாடியவர் இப்பாட்டின் தலைமகன் தலையாலங்காலத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் முல்லைப்பாட்டு இன்பத்தில் முடிய, இங்கோ அந்த இன்பம் இன்னும் உருக் கொள்ளவில்லை மழை தொடர்ந்து பொழிவதால் எல்லோரும் குளிரால் வருந்துகின்றனர்

கோவலர் தம் கையைக் கொள்ளிக் கட்டையால் காய்ச்சுகின்றனர் குளிரால் அவர்கள் பற்கள் நடுங்குகின்றன குரங்கு கூன் போடுகின்றது, பறவைகள் கீழ் வீழ்கின்றன தாய் அன்பிற் சிறந்த பசுவும் குளிரால் கன்றை உதைக்கின்றது பூக்கள் அழகாகப் பூக்கின்றன பூக்களில் நீர்த் துளிகள் போல் தோன்றுகின்றன இத்தகைய குளிர் காலத்தில் கள் குடித்த திண்ணர்கள் மட்டும் தெருவில் திரிகின்றார்கள் பூக்கள் மலர்ந்தது கொண்டே மாலைக்காலம் வந்ததைப் பெண்கள் அறிகின்றனர்; விளக்கேற்றுகின்றனர் பெண்கள் தாம்மிக விரும்பும் சந்தனம், விசிற் முதலியவற்றையும் குளிரின் கொடுமையால் மறக்கின்றார்கள் தென்றற் காற்று வீசும் கதவும் அடைபட்டுக் கிடக்கின்றது தண்ணீர் உண்ணாது வெந்நீர் உண்கின்றனர் இவ்வாறு நாட்டிலும் நகரத்திலும் குளிரே அரசு வீற்றிருக்க, அனைவரும் வருந்துகின்றனர்