பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

செந்தமிழ் பெட்டகம்

பவணந்தி முனிவர் என்னும் சமணப் புலவர் பெருமான் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கணத்திற்கு எழுந்த உரைகளுள் முதல் உரை கண்டவர் மயிலை நாதர் என்னும் சமண அறிஞராவர் அவர் அந்நூலின் 48ஆம் சூத்திரவுரையில், தன்மையால் பெயர் பெற்றன சிந்தாமணி, காவியம் தன்னைப் பயில்வார் விரும்பும் பேறுகளையெல்லாம் நல்க வல்லது என்பது அவ்வறிஞர் கருத்து என்பதை அவர் கூற்று அறிவிக்கிறது

கதாநாயகனான சீவகனை அவன் தாயாகிய விசையை சுடுகாட்டில் கருவுயிர்த்தபோது, அந்நிலைமைக்கு வருந்தி, ‘சிந்தாமணியே, கிடத்தியால்’ என்று மகவை விளித்தது காரணமாக, அவன் வரலாறு ணர்த்தும் இந்நூலுக்குச் சிந்தாமணி என்பது பெயராயிற்று என்பதுமுண்டு திருத்தக்கதேவர் நூலின் இறுதில், ‘சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார் இந்நீரராய் உயர்வர் என்று கூறவதால், அவர் இந்நூலுக்கு வழங்கிய பெயரும் சிந்தாமணி என்பதேயாகுமென்பது புலப்படும் சிந்தாமணி என்னும் பெயரால் வழங்கும் பிற நூல்களினின்றும் இந்நூலைப் பிரித்துணரும் பொருட்டுக் கதைத் தலைவன் பெயரை அடையாகச் சார்த்திச் சீவக சிந்தாமணி’ எனப் பிற்காலத்தார் இந்நூலை வழங்க லாயினர்

‘ஸ்ரீபுராணம்’ என்பது மணிப்பிரவாள உரை நடையிலமைந்த ஒரு நூல் அது சமணப்பெரியார்களாகிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் வரலாற்றை விளக்குவது அந்நூலிலும் இருபத்து நான்காந் தீர்த்தங்கரராகிய ஸ்ரீவர்த்தமானர் புராணத்துள் சீவக சரித்திரம் அமைந்துள்ளது அதிற் கதாபாத்திரங்களின் குறியீடு களிலும் சரித்திரப்போக்கிலும் சிற்சில மாறுதல்கள் காணப்படுகின்றன

சிந்தாமணிக் கதைச் சுருக்கம் : பரத கண்டத்தில் ஏமாங்கத நாடு இசையால் திசை போயது இராசமாபுரம்