பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1


சேதுபதிகள்


தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியும் அதனை அடுத்துள்ள நிலப்பரப்பும் தொன்மையான பாண்டிய நாட்டு எல்லைகளாக அமைந்து இருந்தன. இந்த நிலக்கூறு வெவ்வேறு காலங்களில் கானப்பேர் கூற்றம், முத்துர்கூற்றம், மிழலைக் கூற்றம், துகளுர் கூற்றம் என்ற பெருங்கூறுகளாகவும், வரகுண வளநாடு, கேரள சிங்க வளநாடு, ராஜேந்திர மங்கல நாடு, முத்துநாடு, கானப்பேர்நாடு, கான நாடு, அதளையூர் நாடு, தென்னாலை நாடு, களவழிநாடு, மங்கலநாடு, இடையள நாடு, தழையூர் நாடு, செவ்விருக்கை நாடு, கிடாத்திருக்கை நாடு, கிழ்ச்செம்பி நாடு, வடதலைச் செம்பி நாடு, கைக்கிநாடு, வேம்பு நாடு, அழற்றுநாடு, புனல்பரளை நாடு, பொலியூர் நாடு, வல்லத்திருக்கை நாடு, பருத்திக்குடிநாடு, என்ற சிறுகூறுகளாகவும் வழங்கப்பட்டு வந்தன.

பிற்காலப் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தப் பகுதிகளின் ஒரு பகுதி (கானநாடு, கோன்நாடு) வடக்கில் மாவலி வாண்தரையரும், தெற்கு கிழக்குப் பகுதிகளில்