பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 13 கிறது. தஞ்சைப் பெருவுடையாரிடம் பெரு விருப்புக் கொண்டு பல திருப்பணிகளை இயற்றிய சிவபாதசேகரனாகிய ராஜராஜ சோழனைப் போன்று இந்த சேதுபதி மன்னர்கள் அனைவரும் இராமேசுவரம் திருக்கோயிலின் வளர்ச்சியிலும் இயக்கத்திலும் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு இருந்தனர். கி.பி. 1795 வரை (அதாவது இராமநாதபுரம் சீமை தன்னரசு நிலையை இழக்காத வரை) இந்த சீமையின் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருந்த சேதுபதி மன்னர்கள் அனைவரும் இந்தக் கோயிலின் விரிவாக்கத்திற்கு உதவியுள்ளனர். நித்ய பூஜைகள் விழாக்கள், நடைமுறைகளில் மிகுந்த அக்கரை கொண்டு இருந்த துடன் அவைகள் சிறப்பாக நடைபெற பலநூறு கிராமங்களை இறையிலிகளாக வழங்கினர். இந்த கிராமங்களில் இருந்து சேதுபதி மன்னருக்கு வரப்பெற்ற வருவாய்கள் அனைத்தும் இந்த திருக்கோயிலுக்கு கிடைத்து வந்தன. இனாம் ஒழிப்புச் சட்டம் (1952) அமுலுக்கு வந்த பிறகும் அந்த ஊர்களின் நிலையான வருவாய்த் தொகை ஆண்டுதோறும் திருக் கோயிலுக்கு அரசினரால் வழங்கப்பட்டு வருகிறது. அதனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சின்னஞ்சிறு கோயிலாக அமைந்திருந்த அந்த தாசாதி திருக்கோயில் தோற்றத்திலும், வழிபாட்டு முறையிலும் ஏற்றமும் எழிலும் பெற - அமைப்பிலும் கட்டுமானத்திலும் உயர்ந்து வளர உதவின. இதனால் இங்குள்ள இறைவர் கங்கை முதல் குமரி வரை, ஆத்திக உள்ளங்களில் இராமநாதராக - இடம் பெற்றுள்ளார். இன்னும் இராமநாதபுரம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில ஆலயங்களும், சேதுபதி சீமையின் கடற்கரை வழியில் (சேது பாதை) அன்னசத்திரங் களும், மடங்களும் மற்ற நிறுவனங்களும் மக்களுக்கு தொடர்ந்து பயன்பட இந்த மன்னர்களது தண்ணளியும், தாளாண்மையும் உதவின. அன்றாட வழிபாடுகள், சிறப்பான பூஜைகள், விழாக்கள், நிவந்தங்கள், கட்டளைகள், அன்னசத்திரங்கள், தண்ணிர்பந்தல் என்று பல வேறு சமய சமுதாயப் பணிகள் சிறப்பாக நடைபெற, இந்த மன்னர்கள் இறையிலியாக வழங்கிய எராளமான விளைநிலங்களும், ஊர்களும் அந்த மன்னர்களது இறையுணர்வையும் மக்கள் பால் கொண்டுள்ள பரிவு மனப் பான்மையையும் வெளிப்படுத்தும் சாதனங்களாகத் திகழ்ந்து | l ருகின்றன.