பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 23 - திருபெருந்துறை புராண வரலாறாக குருந்தமரம், சிவ லிங்கம், சிவபெருமான் சின்முத்திரை தோற்றம், மணிவாசகப் பெருமான், அரசு அலுவலர்கள் சக்தி, காளி, தாண்டவமூர்த்தி பதஞ்சலி, வியாக்கிரபாதர் மற்றும் திருமால் - குழல் ஊதும் கோபாலராக; குழலிசையில் மயங்கி நிற்கும் ஆநிரை. இவை களில் சில அற்புதமான புடைச்சிற்பங்கள். இவைகளைத் தொடர்ந்து பிள்ளையார்சுழி, சிவமயம் ஏகாம்பரநாதர் துணை, பூரீ ஆவுடையார் மாணிக்கவாசகர் என்ற சொற்கள். அடுத்து செப்ப்ேட்டு வாசகத் தொடக்கமாக ஸ்வ ஸ்திபூரீ' என்ற மங்கலச் சொல், செப்பேட்டின் காலம், தமிழ் ஆண்டு, திங்கள், கிழமை, நட்சத்திரம் ஆகியவைகள், பின்னர் சேதுமன்னர்களது விருதாவளிகள், கொடை வழங்கிய மன்னர், கொடையினைப் பெற்றவர். பெயர், கொடையாக வழங்கப்பட்ட ஊர் அல்லது புரவு நான்கு எல்லைகளுடன். முடிவில் காப்புரை யாக சம்பந்தப்பட்ட தானதர்மத்தை செய்வதால் ஏற்படும் நன்மை கள்: அகிதம், நினைத்தால் விளையும் பாதகங்கள் மற்றும் முடிவில் இராமசுவாமி துணை, குருநமச்சிவாயம், இராமலிங்கம் துணை, இராமநாதன் துணை, இராமநாதசுவாமி சகாயம், வடமொழி சுலோகம் இவைகளில் ஏதாவது ஒரு தொடருடன் செப்பேடுகள் பெரும்பாலும் முடிவு பெற்றுள்ளன. பல செப்பேடு களில் இந்தத் தொடர் தெலுங்கில் வரையப்பெற்றுள்ளது. கொடையல்லாத மற்ற தானங்களுக்கு அமைக்கப்பட்ட செப்பேடுகள் மேலே கண்ட நியதிகளில் சிறுசிறு மாற்றங்களுடன் காணப்படுகின்றன. பொதுவாக இவைகளின் சொற்றொடர். தமிழில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில செப்பேடுகளில் மட்டும் ஆங்காங்கு சமஸ்கிருதம், தெலுங்கு, கிரந்தம், நாகரி, மொழிச் சொற்களும், சொற்றொடர்களும் கையாளப்பட்டுள்ளன. செப் பேட்டின் நடுப்பகுதி அல்லது இறுதிப்பகுதியில் சேதுமன்னரது பெயர் காணப்படுகின்றது. திருமலை சேதுபதி, ரெகுநாத கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி ஆகியோர் களது கையெழுத்து தெலுங்கு எழுத்துக்களில் உள்ளன. இவை களில் திருமலை சேதுபதி மன்னரது தெலுங்குக் கையெழுத்து ஒரே மாதிரியாக இல்லை. பூரீ சுப்பிரமணிய திருமலைய சேதுபதி ரெகுநாதன், திருமலை யதேவசேதுபதிரெகுநாதன், பூரீ.சுப்ரமணிய