பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

விசும்படி பொன்னிழைகளையும் சில மணிகளையும் பதித்திருந்தார்கள். மணி முடியும் வேண்டாம். தங்க்க் காலணியும் வேண்டாம் என்று நகர்ந்த போது, அரியா சனங்கள் பல, வரிசையாகக் காட்சியளித்தன. தந்தத்தில் மணியிழைத்த ஆசனங்கள் இருந்தன. தங்கத்தில் மணிகள் பதித்த அரியாசனங்களையும் கண்டோம். சில காலம் புதுப்புது மன்னருக்கு புதுப்புது அரியாசனம் செய்ததுபோல் தோன்றிற்று. அவற்றில் சில, பிற நேச காட்டு அரசர்களிடமிருந்து பரிசாகக் கிடைத்தவை.

ஒவ்வொரு மணி முடியும் அரியாசனமும் கோடிக் கணக்கில் விலை மதிப்புடையவை. அத்தனையும் விற்கப் ப டா ம லு ம் களவாடப்படாமலும் காக்கப்படுவது வியத்தலுக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும்.

பெரியதும் சிறியதுமாக செங்கோல்கள் உள்ளன. அவற்றிலும் முத்தும் பவழமும், வைரமும் கோமேதகமும் பிற மணிகளும் பொருங் தியுள்ளன.

நகைக் கொலுவும் பெரியது. பெரிய மணிச் சங்கலிகள் முதல் மோதிரங்கள், வரை கொலுவில் இருந்தன. நம்முடைய இக்காலப் பெண்மணிகளில் பலர், அவற்றில் சிலவற்றை அணிந்து கொள்ள ஒப்ப மாட்டார்கள்! அவ்வளவு மொத்தாகவும் கன மாகவும்

P_<TTSTüT •

தங்கத் தாம்பாளங்கள், தங்கக் கரண்டிகள், தங்கக் கோப்பைகள் இப்படி விலையுயர்ந்த வீட்டுப் பாத்தி ரங்கள். கைப்படாது, பாதுகாக்கப்படுகின்றன.

அவற்றையெல்லாம் பார்க்கிற சாதாரணக் குடி மகனுக்கு என்ன தோன்றும்? நாலைந்து பேர் மகிழ் இத்தனை கோடிகளே முடக்கிவிட்டதால் அல்லவா பொது மக்கள் வறுமையில் வாடி வதங்க நேரிட்டது என்ற எண்ணமே எழும். =